சனிபகவானுடன் கூட்டணி சேரும் குரு பகவான்! ராஜ-யோக பலன்களை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசியினர் இவர்கள் தான்!

0

சனிபகவானுடன் கூட்டணி சேரும் குரு பகவான்! ராஜ-யோக பலன்களை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசியினர் இவர்கள் தான்!

நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கப்படி ஆவணி 29ஆம் தேதி அதாவது செப்டம்பர் 14ஆம் திகதி மகர ராசிக்கு வருகிறார்.

மகர ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று பயணிக்க அங்கு நீச்சம் பெற்று அமரப்போகிறார் குரு பகவான்.

இப்போது ஆட்சி பெற்ற சனியோடு இணைந்து நீச்ச பங்கமடையும் குருவினால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். மேஷம் செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, பாக்ய ஸ்தான அதிபதி குரு பகவான் தொழில் ஸ்தான அதிபதியான சனியுடன் இணைந்து பத்தாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். தர்ம கர்மாதிபதி யோகம் கிடைக்கப்போகிறது.

குருவால் கிடைக்கப்போகும் நீசபங்க ராஜயோகத்தால் உங்களுக்கு பல வழிகளில் பணம் வரும். இதுநாள் வரை சொன்ன செய்ய முடியவில்லையே என்று தவித்த நீங்கள் இனி கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். காரணம் உங்கள் குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் உள்ள ராகு மீது குருவின் பார்வை விழுகிறது. திருமண யோகம் வரப்போகிறது. தர்மகர்மாதிபதி யோகத்தால் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தை தரும்.

அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன் இருப்பவர்களின் சுய ரூபம் புரியும். பண முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கும் போது கவனம் தேவை. இந்த கால கட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறைய சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடலாம்.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அந்தஸ்து கவுரவம் உயரும். சோம்பலும் மந்தநிலையும் மாறி இயல்பு நிலைக்கு திரும்பப் போகிறீர்கள்.

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தடைகள் நீங்கும். குரு பாக்ய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகிறது. ஒன்பதாம் வீட்டு அதிபதி சனியும் லாப ஸ்தான அதிபதி குருவும் இணைவதால் பதவியில் யோகம் கிடைக்கும். சந்தோஷமான செய்திகள் தேடி வரும்.

உங்கள் நிறைய பண வரவு வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ராகு மீது குருவின் பார்வை விழுகிறது. திடீர் யோகம் வரும். பவுர்ணமி நாளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடவும்.

மிதுனம்

புத்திசாலித்தனம் அதிகம் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, திடீர் யோகம் கிடைக்கும். குரு சண்டாள யோகம் கிடைக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் உடன் குரு பகவான் சேரப்போகிறார்.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல உங்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும். மன அழுத்தம் நீங்கும். புத்துணர்ச்சி அதிகரிக்கும். உடலில் இருந்த நோய்கள் நீங்கும். மன குழப்பம் நீங்கி தெளிவு அதிகரிக்கும்.

அதிகாரப்பதவி தேடி வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாதரை சென்று வணங்க நன்மைகள் நடைபெறும். ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். களத்திர ஸ்தானத்தில் உள்ள சனியோடு குரு இணைந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய தொழில் தொடங்கலாம் என்று யோசிப்பீர்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். நிறைய யோகங்கள் தேடி வரும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வரும். முருகன் கோவிலுக்கு சென்று வழிபட பாதிப்புகள் நீங்கும் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, குரு பகவான் ஆறாம் வீட்டில் சென்று சனியோடு இணைகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.

வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க வேண்டாம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும் எட்டாம் அதிபதியும் ஆறாம் வீட்டில் இணைவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன், நோய், எதிர்ப்பு நட்பு விசயத்தில் கவனம் தேவை. எந்த செயலை செய்வதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும்.

தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும். குல தெய்வ வழிபாடு குதூகலத்தைக் கொடுக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். வேலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

வாழ்க்கையில் இதுநாள் வரை ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சனி ஆட்சி பெற்றிருக்கும் போது உடன் குரு வந்து இணைகிறார். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லவும் ஒருமுறை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வருவது நன்மையைத் தரும்.

துலாம்

சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, நான்காம் வீட்டில் இணையும் குரு சனி சேர்க்கையால் வீடு மாற்றம் ஏற்படும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

நன்மை செய்தவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். குரு பகவான் நான்காம் வீட்டில் சனியோடு இணைந்து நீச்ச பங்க யோகம் பெறுகிறார். மிகப்பெரிய ராஜயோகம் தேடி வரப்போகிறது.

அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டுள்ள உங்களுக்கு தொழில் ஜீவனத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது என்றாலும் வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. குல தெய்வத்தை வணங்கவும். பெற்ற தாயை வணங்க நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகராசிக்காரர்களே உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேகமும் விவேகமும் கொண்ட உங்களுக்கு இந்த சனி குரு சேர்க்கையால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரும். குரு சண்டாள யோக அமைப்பினால் சொத்துப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சந்திரன் நீச்சமாகும் ராசி என்பதால் ஏதோ மனக்கலக்கத்துடனேயே இருப்பீர்கள்.

இனி வரும் கால கட்டத்தில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நல்ல நட்பு தேடி வரும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றியும் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் ஏற்படும். செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்கள் ராசி நாதன் குரு மூன்றாம் வீட்டில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு வந்து குடும்ப ஸ்தான அதிபதி சனியோடு இணைந்து பயணம் செய்யப்போகிறார். ஆட்சி பெற்ற சனியோடு இணைந்து குரு நீச்சபங்கமடைகிறார். குடும்ப வாழ்க்கையில் மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும்.

திருமண சுப காரியம் கை கூடி வரும். ஏழரை சனி காலம் என்பதால் சொல்லிலும் சொல்லிலும் செயலிலும் கவனம் தேவை. தன காரகன் சனி தன ஸ்தானத்தில் ஆட்சி இருக்கிறார்.

கூடவே ராசி நாதன் இணைவதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும் ஒற்றுமை ஏற்படும். குழப்பங்கள் நீங்கி மனநிலை தெளிவாக இருக்கும் ஏழரை சனியாக இருப்பதால் ஒருவித பதற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

குரு இணைவதால் பதற்றம் நீங்கி நன்மை ஏற்படும். வேலையில் இடம்மாற்றம் ஏற்படும் வீடு மாற்றம் வரும். சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களே உங்கள் ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம சனி காலம் என்பதால் மன குழப்பமும், குடும்பத்தில் குழப்பமும் ஏற்பட்டு வந்தது இனி குழப்பங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. குரு வந்து உங்கள் ராசியில் உள்ள சனி பகவானுடன் இணைகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

தொழில் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முதலீடுகளில் லாபம் கிடைக்கும். எந்த நல்ல காரியமும் நடைபெறாமல் தடை இருந்தது இனி தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறப்போகிறது. குருவின் பார்வையும் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு கிடைப்பதால் திருமணம் நடைபெறும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவைப்படும். வேலை செய்யும் இடத்தில் அதிக வேலை இருக்கும். வேலைப்பளுவினால் சோர்வு அதிகரிக்கும். பண வருமானத்தில் இருந்த தடைகள் பிரச்சினைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சமூகத்தில் கவுரவம் தேடி வரும். ஞாயிறுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, விரைய ஸ்தானத்தில் உள்ள ராசிநாதன் சனியுடன் குரு இணையப்போகிறார். எதிர்பாராத பண வரவு வரும். கடந்த சில மாதங்களாக மனதில் இருந்த தடுமாற்றம் விலகப்போகிறது.

மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். லாப ஸ்தானாதியும் வாக்கு ஸ்தானாதிபதியுமான சனி பகவான் கும்ப ராசிக்கு வருகிறார்.

வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். வண்டி வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். மனதில் இருந்த சுமைகளும் அழுத்தங்களும் முடிவுக்கு வரும்.

மாணவர்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வருவது நன்மையைத் தரும். ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மனை சென்று வழிபட்டு வருவது நல்லது.

மீனம்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில்அதிசாரமாக இருந்த குரு பகவான் இனி லாப ஸ்தானமான மகர ராசியில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார்.

உங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.

லாப அதிபதியுடன் ராசி அதிபதி குரு இணைந்து நீசபங்க ராஜயோகத்தை தரப்போகிறார். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. நண்பர்கள் உறவினர்களின் உதவி தேடி வரும்.

வீடு வாங்குவதற்கான லோன் கிடைக்கும். முடியாமல் தள்ளிப்போன காரியங்கள் முடிவுக்கு வரப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாழக்கிழமையன்று குரு பகவானை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பேரோட அந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமென்றால் இந்த ஒரே ஒரு பொருள் மட்டும் போதும்!
Next articleஇன்றைய ராசி பலன் 15.09.2021 Today Rasi Palan 15-09-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!