சடலமாக கிடந்த 39 புலம்பெயர்ந்தவர்கள் உண்மையில் எப்போது உயிரிழந்தார்கள்? வெளியான முக்கிய தகவல் !

0
445

பிரித்தானியாவில் லொறியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் நாட்டுக்குள் நுழைவதற்கு குறைந்தபட்சம் 12 மணி நேரத்துக்கு முன்னதாகவே உயிரிழந்துவிட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதில் உயிரிழந்த அனைவரும் சீனாவை சேர்ந்தவர்கள் என பொலிசார் நேற்று தெரிவித்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அவர்கள் இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும்.

இந்நிலையில் பிரித்தானியாவுக்குள் குறித்த லொறி நுழைவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னரே உள்ளிருந்த 39 பேரும் இறந்துவிட்டனர் என விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த லொறியில் வெப்பநிலை -25Cக்கும் குறைவான அளவில் இருந்ததால் அதன் உள்ளே 39 பேர் இருந்தால் நிச்சயம் மரணம் உறுதி தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் லொறியை இயக்குபரிடம் தான் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் கட்டுபாடுகள் உள்ளது எனவும் அதை அவர் செய்ய தவறியிருக்கலாம் எனவும் கூறினார்கள்.

இந்த லொறியை ஓட்டி வந்த Robinson என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிம்ம ராசியை கண்டம் பண்ண காத்திருக்கும் சனி! தீபாவளி அன்று விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா?
Next articleஅடுத்தடுத்த சிக்கலில் கல்கி பகவான் கைதாவாரா?