நீரிழிவினை கட்டுப்படுத்தும் மூலிகை உணவுகள். சக்கரை நோய் பற்றிய கவலை வேண்டாம் உணவு சீரமைப்பு மட்டுமே போதும்.

0
2381

சக்கரை நோய் பற்றிய கவலை வேண்டாம் உணவு சீரமைப்பு மட்டுமே போதும்.

உங்களுக்கு தெரியமா? நம் உண்ணும் உணவு முறை மற்றும் நகர வாழ்க்கையின் தாக்கம் போதிய உடற் பயிற்சியின்மை போன்ற காரணங்களினால் இந்திய மக்கள் தொகையில் தற்பொழுது 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் மூலிகைகளையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வில்வம்:-

வில்வ இலையிலிருந்து கிடைக்கும் பாஸ்பேட் சர்க்கரை நோயைக் குறைப்பதோடு நோயர்களின் திசுக்களுக்கு அதிக பிராணவாயு கிடைக்கச் செய்வதன் மூலம் சோர்வடையாமல் காக்கிறது. மேலும், சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் இதய இரத்தக் குழாய் அடைப்பைத் தடுக்கின்றது.

மஞ்சள்:-

நெல்லிவற்றலுடன் சேர்ந்து மஞ்சளானது வழங்கப்படும் போது சர்க்கரை நோய் குணமடைவதுடன் நீண்ட கால பின் விளைவுகளைத் தடுத்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் அதிகளவான இரத்தக் கொழுப்பு ஆகியனவும் தடுக்கப்படுகின்றது.

சீந்தில்:-

நல்வாழ்வை நீட்டிக்கும் காய கற்ப மூலிகை, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்திக்குக் காரணமான “இம்யூனோகுளோபுலின் – ஜி” – ன் அளவை, சீந்தில் அதிகப்படுத்துகிறதுடன், கொலஸ்டிராலையும் குறைத்து சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் எடைக் குறைவினையும் தடுக்கின்றது.

நாவல்:-

நாவலின் பட்டை, பழம், விதை ஆகிய மூன்றும் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை நாவல் விதை மற்றும் விதையின் மேல்தோல் ஆகியவை இன்சுலின் அளவை அதிகரிப்பதனை பல்வேறுபட்ட நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இவ்வாறாக நாவல் விதைகள் சர்க்கரை நோயில் உண்டாகும் சிறுநீரக மற்றும் கல்லீரல் மாற்றங்களை குணப்படுத்துகின்றன.

கடலழிஞ்சில்:-

அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் “பொன் குறண்டி” எனப்படும் இம் மூலிகை இரத்த சர்க்கரை அளவை 29 சதவீதம் குறைப்பதாகவும் நாம் உண்ணும் உணவு குளுகோஸாக மாறும் வேகத்தைக் குறைத்து நோயர்களுக்கு இன்சுலின் தேவை குறைவதாகவும் கண்டறியப்பட்டு சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் மற்றும் அதன் ஏனைய அறிகுறிகளான உடல்வலி மற்றும் தசைவலி ஆகியவற்றுக்காக “கடலழிஞ்சில்” நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது

பாகற்காய்:-

பாகல் இலை காய் விதைகளில் “தாவர இன்சுலின்” என்ற புரதச் சத்து காணப்படுவதனால் இன்சுலின் போல் செயல்படுவதாகவும் இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயர்களுக்கும் பயன்படுவதாகவும் கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதுடன் பாகற்காயானது இரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைத்து சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. மேலும் நரம்புகளின் பாதிப்பையும் சரிசெய்து சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரித்து கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி இரத்தத்தில் கலப்பதகைக் குறைக்கின்றது.

சிறுகுறிஞ்சான்:-

“சர்க்கரைக் கொல்லி”யாகிய சிறுகுறிஞ்சான் கணையத்தில் இன்சுலின் சுரப்பிக்கும் பீட்டா செல்களைப் புதுப்பித்து அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்குவதன் மூலம் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகமாவதாலும் குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைப்பதாலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகின்றதுடன் இரத்தத்தில் கொலஸ்டிரால் டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பான H.D.I. இன் அளவை அதிகரித்து மாரடைப்புக்குக் காரணமான இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதனையும் தடுக்கின்றது.

வெந்தயம்:-

வெந்தையத்தில் காணப்படும் “ட்ரைகோனெல்லின்” அதிகரித்த இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு கொலஸ்டிராலையும் 25% அளவு குறைத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கின்றதுடன் குடலில் சர்க்கரை ஊறிஞ்சப்படும் வேகத்தையும் குறைக்கின்றது.

ஆவாரை:-

ஆவாரையின் இலை பூ பட்டை வேர் என ஐந்து உறுப்புகளுமே நீரிழிவில் பயன்படுகின்ற வகையில் இவை அதிக அளவிலும் அடிக்கடியும் சிறுநீர் போவதைக் குறைத்து சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவினைக் குறைத்து இதயத்தை பாதுகாத்து ஹீமோ குளோபின் அளவு தரம் ஆகியவற்றை அதிகரிக்கின்றது.

சர்க்கரைக் கொல்லி மூலிகைகள்:-

மேற்கூறப்பட்டனவற்றை விட வேம்பு வேங்கை கொன்றை மருது கறிவேப்பிலை கடுகு மற்றும் ரோகிணி ஆகிய மூலிகைகளும் சர்க்கரை நோயில் பலன் அளிப்பதை தற்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தப்பட்டதனால் இத்தகைய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிறுகுறிஞ்சான் சூரணம் வில்வம் மாத்திரை சீந்தில் மாத்திரை கடலழிஞ்சில் மாத்திரை நாவல்மாத்திரை நீரிழிவு சூரணம் ஆவாரை குடிநீர் மற்றும் திரிபலா கற்பம் போன்ற பல மருந்துகளில் ஏற்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்து வரலாம்.

எதுஎவ்வாறாயினும் மூலிகை மருந்துகள் உணவுச் சீரமைப்பு மற்றும் தக்க உடற்பயிற்சி ஆகிய மும்மூர்த்திகள் உதவியுடன் சர்க்கரைநோயை வெல்ல முடியும் என்பது யாரும் மறுக்காத உண்மையாகும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலை வலிமையாக்கும் கற்ப மூலிகை!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை !