உங்கள் போனில் திடீரென்று இப்படி ஆகிறதா? அப்போ ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்!

0

தங்கள் போனில் இப்படிப்பட்ட ஆப் இருக்கிறதா என்பதைப் பெண்கள் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். ஏனெனில், இதில் நடக்கும் இன்னும் பல விஷயங் களை என்னால் வெளிப் படையாகச் சொல்லவே முடியாது. இந்த ஸ்பை ஆப்களின் மிக முக்கிய அபாயமே, இதைக் கொண்டு போனின் கேமராவை இயக்க முடியும் என்பது தான்.

பல பெண்களின் அந்தரங்கங்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து, அதை வியாபாரம் செய்வது பெரியளவில் நடக்கிறது. இவற்றை வைத்து, பெண்களை மிரட்டும் சம்பவங் களும் நடந்துள்ளன. இது குறித்து போலீஸில் புகார் கொடுக்கக் கூட பெண்கள் முன் வருவதில்லை. அவர்களால் இது குறித்த சரியான ஆதாரங் களைத் திரட்ட முடிவ தில்லை என்பது ஒரு பிரச்னை. அப்படி ஒரு புகார் கொடுத்தால்,

சமூகத்தில் தங்களின் பெயர் பாதிக்கப்படும் என்கிற பயம் இன்னொரு பிரச்னை. இதனால், வெளியில் சொல்ல முடியாமல் பல பெண்கள் தவிக்கிறார்கள்.

உங்கள் போனில் ஸ்பை ஆப் இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

‘ஸ்பை ஆப்’கள் நமக்கே தெரியாத பெயர்களில் நம் மொபைலில் இன்ஸ்டால் செய்யப் பட்டிருக்கும். ‘Settings’ என்ற பெயரிலோ, ‘Tools’ என்ற பெயரிலோ இந்த ஆப் இன்ஸ்டால் ஆகி யிருந்தால், உங்களுக்கு எப்படி சந்தேகம் வரும், சொல்லுங்கள். சில அறிகுறி களை வைத்து உங்கள் போனில் ஸ்பை ஆப் இருப்பதை உறுதி செய்யலாம்.

உங்கள் போனை ஆஃப் செய்யும் போது வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்; ஆஃப் ஆன பிறகும் சில நொடிகள் அதன் திரை ஒளிரும்.
நீங்கள் பயன்படுத்தாமலே திடீரென மொபைலின் திரை ஒளிரும்.
எந்தப் பயன்பாடும் இல்லாமலே திடீரென போன் சூடாகும்.
வழக்கத்தை விட வேகமாக மொபைலின் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விடும்.
மொபைல் டேட்டா பயன்பாடும் வழக்கத்தை விட அதிகமாகியிருக்கும்.
உங்களுக்கு வரும் மெசேஜ்களை நீங்கள் படிக்கா மலேயே, தானாகவே படிக்கப் பட்ட மெசேஜாக மாறி யிருக்கும். அதை ஸ்பை ஆப் பயன்படுத்தி யாரோ படித்திருப்பார்கள்.

போன் அழைப்பு களைப் பேசும் போது பின்னணியில் தேவை யற்ற சத்தங்கள் எழும்.
உங்களுடைய Location உங்களுக்கே தெரியாமல் ஆன் ஆகியிருக்கும். உங்கள் இருப்பிட த்தைக் கண்காணிப் பதற்காக மொபைலின் ஜி.பி.ஆர்.எஸ் அதிகமாகப் பயன் படுத்தப் பட்டிருக்கும்.
இது போன்ற பிரச்னைகள் இருந்தால், மொபைலில் எந்த ஆப் அதிக டேட்டாவைப் பயன் படுத்துகிறது என்று பார்த்து ‘ஸ்பை ஆப்’ இருப்பதை உறுதி செய்யலாம்.
ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்கள் போலவே ஆன்டி ஸ்பை வேர்களும் கிடைக் கின்றன.
இதற்கு உதவ இணைய தளங்களும் இருக்கின்றன. நம்பிக்கை யானதுதானா என்று பார்த்துப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரணிலுக்கு ஆதரவு மணி அடிக்கின்றது ஜே.வி.பி! நெருக்கடி ஏற்பட்டால் தோள்கொடுக்க முடிவு!
Next articleமகிந்தவின் நிலை தொடர்பில் கோத்தபாயவின் முக்கிய அறிவிப்பு!