கோவிட் தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0

நாட்டில் தற்போது கோவிட் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 12 குழந்தைகளுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கோவிட் தொற்று உறுதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொழும்பில் ‘டியூ – 5’ என்ற கோவிட் உப திரிபானது, வேகமாகப் பரவுவதாகவும் குறித்த உப திரிபு தொடர்பான மாதிரிகள் தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டெங்கு நோயினால் பாதிக்கபட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், டெங்கு நுளம்புகளிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article50 சதவீதத்தால் அதிகரிக்க உள்ள பொருட்களின் விலைகள்! வெளியாகியுள்ள காரணம்!
Next articleஇன்றைய ராசி பலன் 08.08.2022 Today Rasi Palan 08-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!