கோடம்பாக்கத்தில் விஸ்வரூபம் எடுக்கும் விஜயகுமாரின் குடும்ப சண்டை!

0
356

நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்சனை தொடர்ந்து கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது.

2010 ஆம் ஆண்டில் விஜயகுமாரின் குடும்பத்துக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே நடந்த அடிதடி சண்டை விஸ்வரூபம் எடுத்தது.

அன்றிலிருந்து தொடர்ந்து நடந்து வரும் இந்த பிரச்சனை மீண்டும் தற்போது வீட்டு பிரச்சனைக்காக மோதல் வந்துள்ளது. இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மூலக்காரணமே சொத்துதான் என கூறப்படுகிறது.

இதனை வனிதாவே பல ஊடகங்களில் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு, இவருக்கு பிறந்தவர்கள் கவிதா, அனிதா மற்றும் நடிகர் அருண் விஜய்.

இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா. இவர்களுக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி.

கலைக்குடும்பம் என கொண்டாடப்பட்டு வந்த இந்த குடும்பத்தின் சண்டை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

என் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள். இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் மகள் வனிதா.

வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரி. இவர்தான் விஜயகுமாரின் முதல்பேரன் என்பதால் இவரது பெயரில் சொத்துக்களை விஜயகுமார் வாங்கியதாகவும், அதன்பின்னர் வனிதா தனது கணவனை விட்டு பிரிந்து இரண்டாவது திருமணம் செய்த காரணத்தால் பேரனை, தனது மகளோடு அனுப்ப மாட்டேன் என விஜயகுமார் பிரச்சனை செய்தார்.

தற்போது, மீண்டும் ஆலப்பாக்கத்தில் உள்ள மஞ்சுளாவின் வீட்டில் தான் தங்கவேண்டும் என மகள் வனிதா கூறி பிரச்சனை செய்து வருகிறார். தனது குடும்ப பிரச்சனையை ஒவ்வொரு ஊடகங்களாக சந்தித்து பேட்டி அளித்து வருகிறார் வனிதா.

ஆனால், விஜயகுமார் இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க முன்வரவில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: