கொழும்பு, வெள்ளவத்தையில் நள்ளிரவு நேரங்களில் அச்சுறுத்தும் மர்மநபர்! காணொளி அம்பலம்!

0
276
Sign Up to Earn Real Bitcoin

கொழும்பு, வெள்ளவத்தையில் நள்ளிரவில் செல்லும் வாகனங்களை அச்சுறுத்தும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளவத்தையின் மெரின் ட்ரைவ் வீதிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவர் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களை மறித்து நிறுத்துவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மெரின் ட்ரைவ் வீதியில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் வீதிக்கு நடுவில் சென்று வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த இளைஞன் நடவடிக்கை மேற்கொள்கின்றார்.

இவ்வாறான அச்சுறுத்தலுக்கு பலர் முகங்கொடுத்துள்ள நிலையில், இதனை துணிச்சலாக சாரதி ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

இளைஞனின் செயற்பாட்டின் காரணமாக வாகனத்தை பின் பக்கமாக ஓட்டிச் சென்று அந்த இடத்தை விட்டு சென்று விடுகின்றார்.

இது தொடர்பான காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த சாரதி, இரவில் தனியாக செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: