கொழும்பில் விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – பல பெண்கள் கைது!

0
389

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் நடத்திச் செல்லப்பட்ட பல விபச்சார விடுதிகள் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

ராஜகிரிய நாவல வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது வைத்தியராக செயற்பட்ட நபர் மற்றும் விபச்சார பணியில் இடுப்பட்டிருந்த 4 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வெல்ல, நீர்கொழும்பு, பொலன்னறுவை மற்றும் பதலங்கல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தெஹிவளை, கவ்டான வீதியில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்றும் நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அங்கு 4 பெண்கள் கைது செய்ய்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனுராதபுரம், மாத்தளை மற்றும் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: