கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
கொழும்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மதகுருமார்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பெருந்திரளானோர் ஒன்றுதிரண்டு கலந்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய போராட்டத்துக்குத் தடை விதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை நாடிய போதும் அதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்திருந்தது.
போராட்டக்காரர்கள் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டால் பொலிஸார் தமது அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: