கொழும்பில் மசாஜ் நிலையத்திற்குள் இளைஞனின் அட்டகாசம்!

0
247

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்திற்குள் மோசடியான முறையில் நடந்த கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை ஊழல் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி எனக் கூறி, குறித்த இளைஞன் மசாஜ் நிலையத்தில் 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஆயுர்வேதத் துறையைச் சார்ந்த மாணவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தான் பொலிஸ் அதிகாரி என கூறிய போது, அந்த மசாஜ் நிலையத்தில் உரிமையாளர் உட்பட ஊழியர்கள் அவரிடம் பொலிஸ் அடையாள அட்டையைக் கோரியுள்ளனர்.

இதன்போது இளைஞன் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்டுள்ளமையினால், அங்கிருந்த ஊழியர்கள் அவரைப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

23 வயதான இந்த இளைஞன் பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞன் இதேபோன்று பல நிறுவனங்களிடம் கப்பமாக பணம் பெற்றுக் கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொலிஸார் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டமை அந்தத் துறைக்கு ஏற்பட்ட பாரிய ஆபத்தாகும் என பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: