கொழும்பில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பெண்கள்! காரணம் தெரியுமா?

0
429

புதுவருடத்திற்காக கொழும்பு உட்பட பல நகரங்களில் பொருட்கள் கொள்வனவு செய்ய வரும் நுகர்வோரின் பொருட்களை கொள்ளையடிக்க பெண்கள் கும்பல் ஒன்று மீண்டும் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணப்பை, கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடிப்பதற்காக இந்த கும்பல் மீண்டும் வருகைத்தந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நேற்று தெரிவித்துள்ளார்.

எனவே, புறக்கோட்டை, மஹரகம, நுகேகொட, ஹோமாகம, கிரிபத்கொட, பியகம, கொட்டாவ போன்ற நகரங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வரும் நுகர்வோர் தங்கள் பணப்பை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெண்கள் கொள்ளை கும்பல் புதுவருட காலப்பகுதியில் கொழும்பிற்கு வருவதனை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த கும்பல் புத்தளம் பகுதியில் இருந்தே வருகைத்தருகின்றது. இந்த கும்பலில் கிட்டத்தட்ட 20 பெண்கள் உள்ளனர்.

அவர்கள் பிரிந்து நகரங்களுக்குள் செல்வார்கள். இன்னும் ஒரு குழு பேருந்துகளில் செல்லும். இவர்கள் மக்கள் அதிகமாக உள்ள இடங்களுக்கு சென்று பணப்பை, கையடக்க தொலைபேசிகளை திருடி செல்வார்கள்.

இந்த பெண்கள் குழந்தைகளை தூக்கி சென்றே இவ்வாறு கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றனர். சந்தேகத்திற்குரிய பெண்கள் என அறிந்தால் 0112-421111 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள். இந்த கும்பலின் பலர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: