சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்னால் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொல்லப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமாலின் மரணத்திற்கு கண்டனம் வெளியிட்டும், அதற்கு நீதி வேண்டும் என வலிறுத்தியும் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சவுதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கசோக்கி, துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு கடந்த மாதம் சென்ற போது, அங்கு ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தார் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயம் சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.