கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பாழடைந்த பள்ளியை புதுப்பித்த ஆசிரியர்..!

0

கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பாழடைந்த பள்ளியை புதுப்பித்த ஆசிரியரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் சுங்கசலே என்ற சிறிய‌கிராமம் உள்ளது. அங்கிருக்கின்ற பாடசாலை கட்டிடம் பாழடைந்துள்ளதால் ஆசிரியர் காந்தராஜூ அவர்கள் மாவட்ட பஞ்சாயத்துதிடம் பள்ளியை புதுப்பிக்க கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஆசிரியரியரின் கோரிக்கையை ஏற்ற பஞ்சாயத்து நிர்வாகம் பள்ளிக்கென 50 ரூபாவினை ஒதுக்கியது.ஆனால் கொரோனா கார்ணமாக பள்ளியை புதுப்பிக்க தாமதம் ஆனதால் இந்த‌ ஊரடங்கினை கருத்தில் கொண்டு ஆசிரியர் காந்தராஜூ தினமும் பள்ளிக்கு வந்து பாழடைந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் வேலையில் தனியாளாக ஈடுபட்டு வெற்றியும் கண்டார். தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஆசிரியர் அவர்கள் சுவர்களில் வர்ணங்கள் தீட்டியதுடன், பூச்செடிகள் வரைந்து, தரையில் அமர்ந்த குழந்தைகளுக்கு தற்போது மேஜைகள், நாற்காலிகள், போன்ற வசதிக்களையும் ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும் மாணவர்களின் படைப்பாற்றலை விருத்தி செய்யும் வகையில் படங்களை வரைந்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கிய தொகை போதுமான‌தாக இல்லாததால் தனது சொந்த பணம் 40 ஆயிரம் ரூபாவினை பள்ளிக்காக செலவிட்டுள்ளார். பள்ளி அபிவிருத்தி கண்காணிப்பு குழு மற்றும் பெற்றோர்களும் பல உதவிகள் புரிந்துள்ளனர். ஊரடங்கிற்கு மத்தியிலும் பாழடைந்த அரசுப் பள்ளியை புதுப்பொலிவுடன் மாற்றியதற்காக கிராம மக்கள் அவரை நன்றியுடன் பாராட்டுகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படம் OTT-யில்..!
Next articleஇன்றைய ராசி பலன் 08.06.2020 Today Rasi Palan 08-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!