கொரொனாக்கு எதிரான போராட்டத்தில் வெறும் 15 நாட்களில் இலங்கை செய்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்!

0
532

நான்கு லட்சத்திற்கு எழுபதாயிரம் ஆயிரம் பேர் (470,000) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். இதில் தற்போது வரை சுமார் 21 கும் மேற்பட்டோர் ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை மிகப் பெரிய சாதனை செய்து வருகிறது.

இலங்கையில் கடந்த 10ம் திகதி கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான நபர் ஒருவர் கண்டுபிடிக்கப் பட்டார். ஏற்கனவே வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபருக்கு 10 திகதி கொரோனா என்பது உறுதியானது. அன்றில் இருந்து இன்று வரை சுமார் 102 நோயாளிகள் கண்டு பிடிக்கப் பட்டனர். இவர்களுக்கு முன்பு ஏற்கனவே சீனாவில் இருந்து இலங்கை வந்த பெண் ஒருவர் குணமாகி சென்றிருந்தார்) 102 நோயாளிகளில் இருவர் முழுவதும் குணமடைந்த நிலையில் வீட்டிற்கு அனுப்பப் பட்டனர்.

இவ்வாறன நிலையில் இலங்கையில் கடந்த 40 மணித்தியாலங்களாக கொரோனா நோயாளி ஒருவர் கூட அடையாளம் காணப் படவில்லை. சுமார் 16 நாட்களில் இருவர் முழுமையாக குணமடைந்ததுடன் ஏற்கனவே குணமடைந்த சீனப் பெண்ணுடன் சேர்த்து முழுமையாக 03 மூவர் குணமடைந்துள்ளனர்.

மற்றைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய சாதனையாக இது பார்க்கப் படுகின்றது. இதற்கு சீனா மற்றும் மலேசியா உட்பட சில உலக நாடுகள் தமது வாழ்த்துக்கள் இலங்கைக்கு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: