கொத்தமல்லி விதைகளை ஊற வைத்து குடித்து பாருங்கள்! அற்புதம் இதோ!

0
2938

வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, கல்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், புரோட்டீன,; கார்போஹைட்ரேட் மற்றும் எனர்ஜி போன்ற ஏராளமான சத்துக்களைக் கொண்ட கொத்தமல்லியை சமையலில் சேர்க்கும் சாப்பாட்டின் மணத்தையும், சுவையையும் மேம்படுத்துவதுடன், அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வரும்போது உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் நீக்க முடியும். அவை பற்றி நோக்குவோம்.

இரத்த சோகை பிரச்சனையில் இருந்து; விடுபடுவதற்கு கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வருதல் நல்லது.

சர்க்கரை நோய் விரியத்தை கட்டுப்படுத்துவதற்கு சிறிதளவான கொத்தமல்லி விதையை இரவில் தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடித்தல் நல்ல பலனைத்தரும். அதேபோல, கொத்தமல்லி விதைகளை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி, அந்நீரை வெறும் வயிற்றில் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வரும் போது, வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து முற்றாக விடுபட முடியும்.

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதற்கு 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, தினமும் 1-2 முறை குடித்து வர வேண்டும். சுவைக்காக சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

ஆஸ்டியோபோரோசிஸைத் தடுப்பதற்கு கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடித்தல் அல்லது 3 கிராம் அளவுள்ள கொத்தமல்லி பொடியை 150 மிலி கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் அதனை வடிகட்டிக் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியினை நீக்குவதற்கு கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் குடித்தல் நல்லது.

அஜீரண பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடுவதற்கு 1.2 கிராம் அளவுள்ள கொத்தமல்லி விதைகள் அல்லது 1/2 தேக்கரண்டி மல்லி பொடியை 150 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதனை 15 நிமிடம் கழித்து, தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடித்தல் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கண் பிரச்சனைகள் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கு தடுக்கலாம் கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரினால் தினமும் கண்களைக் கழுவுதல் வேண்டும்.

மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வாய்வுத் தொல்லை போன்றவற்றைத் தவிர்ப்பதற்கு 6 கிராம் கொத்தமல்லி விதைகளை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 தேக்கரண்டி தேன் கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வருதல் நல்ல பலனளிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: