ஒருவருடைய கையில் உள்ள கட்டை விரலை அவர் எப்படி மடக்குகிறார் என்பதை வைத்தே அவர் எப்படி பட்டவர் என்று அறிந்துவிடலாம்.

0
2319

ஒருவர் தனது கையில் உள்ள கட்டை விரலை மடக்கும் விதத்தை வைத்தே அவரது குணாதிசயத்தை எம்மால் இலகுவாக கணிக்க முடியும். பொதுவாக இது நான்கு வகையாக அமையலாம். அவையாவன,

விரலை மேலே வைத்தல்

இவ்வாறு கட்டை விரலை மடிக்கக் கூடியவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாகவும், பல புதிய விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைந்தவர்களாகவும், பொதுநல விரும்பிகளாகவும், கனிவான நபர்களாகவும், தம்மைச் சுற்றியுள்ளோரை ஈர்க்கக் கூடியவர்களாகவும் காணப்படுவர்.

விரலை உள்ளே வைத்தல்

மேலுள்ளவாறு விரலை மடிக்கக் கூடியவர்கள் நிறைய அரட்டை அடிப்பவர்களாகவும், துல்லியமாக பேசுபவர்களாகவும், சரியான முடிவுகள் எடுப்பவர்களாகவும், எந்தவொரு பிரச்சினையின் போதும்; அதன் வேர் அதாவது மூலம் எங்கிருக்கிறது என அறியும் திறன் கொண்டவர்பளாகவும் காணப்படுகின்ற போதிலும், நண்பர்களை உருவாக்கி கொள்வதில் சிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

விரலை வெளிப்புறம் வைத்தல்

மேலுள்ளவாறு விரலை மடிக்கக் கூடியவர்களடம் காணப்படக் கூடிய நடைமுறைக்கு ஏற்றவாறு சிந்தித்தல் மற்றும் செயலை வேகப்படுத்தும் இயல்பு ஆகியன இவர்கள் மீதான மதிப்பை அதிகரிக்கின்ற அதேவேளை, இவர்களிடம் காணப்படக் கூடிய தோல்வியின் மீதான பயம் சில சமயங்களில் இவர்களை தைரியமாக முடிவு எடுப்பதை தடுத்து விடுகின்றது.

விரலை மேல் நோக்கி உயர்த்தினால்

மேலுள்ளவாறு கட்டை விரலை மடிப்பவர்கள் புத்திசாலியாகவும், பன்முக திறமை கொண்டவர்களாகவும், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக ஒரே நேரத்தில் பல இடங்களில் கால் வைக்க முயல்பவர்களாகவும் காணப்படுவர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: