கைக்குழந்தைகளை அனல் வீசும் தணலில் உருட்டிய சம்பவம்!!

0
797

கைக்குழந்தைகளை அனல் வீசும் தணலில் உருட்டிய சம்பவம்

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு கைக்குழந்தைகளை அனல் வீசும் தணலில் உருட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சடங்கு பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்றும் இதில் குழந்தைக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் இதனை நடத்தும் கிராமத்தினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த விபரீத சடங்கின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மதச்சடங்குகளின் பெயரால் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற விபரீதங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: