கைகளில் உள்ள கருமையைப் போக்கி, வெண்ணிற தோற்றத்தை பெற இயற்கை வழிகள்.

0
1600

கைகளில் உள்ள கருமையைப் போக்கி, வெண்ணிற தோற்றத்தை பெற இயற்கை வழிகள்.

அழகான கைகளும் ஒருவரது தோற்றத்தை அதிகரித்துக் காட்டும். எவ்வளவு தான் அழகிய உடை அணிந்து நல்ல தோரணையுடன் இருந்தாலும், கைகள் அசிங்கமாக இருந்தால், அது நிச்சயம் மோசமான தோற்றத்தையே கொடுக்கும். எனவே எப்படி முகத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்போமோ, அதேப் போல் கைகளுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொருவருக்கும் கைகளின் நிறம் மட்டும் கருப்பாக காணப்படும். இதற்கு சுற்றுப்புற மாசுக்கள் மட்டுமின்றி, இறந்த செல்களின் தேக்கம், வறட்சி போன்றவைகளும் தான் காரணம். கைகளின் அழகை அதிகரிக்க ஒருசில செயல்களை தினமும் மேற்கொண்டால், கைகளில் உள்ள கருமையைப் போக்கலாம். அதுவும் நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்தாலே போதும்.

இக்கட்டுரையில் கைகளில் உள்ள கருமையைப் போக்கி, கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, அழகான கைகளைப் பெறுங்கள்.

தக்காளியை சரி பாதியாக அறிந்து கொண்டு, அவற்றை தங்களது கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள கருமை நிறங்கள் மற்றும் சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து, மிகவும் வெண்மையாக காட்சியளிக்கும், இந்த முறையை தினமும் செய்து வர வேண்டும்.

* வாழைப்பழம் சரும பராமரிப்புக்கு அதிகளவு உதவுகிறது. இந்த வாழைப்பழத்தை தினமும் நன்றாக மசித்து அவற்றை கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய, சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைவதுடன், கை (Wrinkles Hands) மற்றும் கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த முறையை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் வாரத்தில் இரண்டு முறை செய்து வரவும்.

* ஆலிவ் ஆயில் பொதுவாக சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கக்கூடியது, எனவே தினமும் ஆலிவ் ஆயிலை தங்களது கை மற்றும் கால்களில் நன்றாக தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும், பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்வதினால் கை (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைய செய்வதுடன், சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.

* அன்னாசி பழத்தில் விட்டமின் சி அதிகளவு உள்ளது, எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை மறைய செய்ய வேண்டும் என்றால், அன்னாசி பழத்தை பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அவற்றை கை மற்றும் கால்களில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும், அதன்பிறகு குளிர்ந்த நீரால், கைகள் மற்றும் கால்களை கழுவவும். இவ்வாறு செய்வதினால் கைகள் (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருமையான நிறங்கள் மறைந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை
எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலவை ஒரே வாரத்தில் சருமத்திற்கு நல்ல நிறத்தை அளிக்கும். அதற்கு 2 ஸ்பூன் சர்க்கரையில், பாதி எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து ஊற்றி, அதனை கைகளில் தடவி மென்மையாக 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும். அதன் பின் 5 நிமிடம் கழித்து நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.

பால், எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய்
பாலில் சருமத்தை வெள்ளையாக்கும் பண்புகள் உள்ளன. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து சருமத்திற்கு பயன்படுத்தும் போது, அதனால் சரும நிறம் வேகமாக அதிகரிக்கும். ஆகவே ஒரு பௌலில் 4-5 ஸ்பூன் பால் எடுத்து, அதில் 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் 8-10 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்த கலவையை கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும் 10 நிமிடம் நன்கு ஊறிய பின், இறுதியில் நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் சந்தனம்
மஞ்சள் மற்றும் சந்தனம் இரண்டுமே சரும நிறத்தை மேம்படுத்தும் பொருட்களாகும். அதற்கு 2:1 என்ற விகிதத்தில் மஞ்சள் தூள் மற்றும் சந்தன பொடியை எடுத்க் கொள்ள வேண்டும். பின் அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள கைகளில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இறுதியில் கைகளில் நீரில் ஊற வைத்து 3-5 நிமிடம் கழித்து கைகளைத் தேய்த்து கழுவி, துணியால் துடைக்க வேண்டும்.

பப்பாளி
கைகளில் உள்ள கருமையைப் போக்க பப்பாளிக் காய் உதவியாக இருக்கும். அதற்கு இரண்டு பப்பாளிக் காய் துண்டை எடுத்து, அதன் மென்மையான உட்பகுதியால் கைகளை 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 1-2 நிமிடம் கழித்து, சுடுநீரில் நனைத்த துணியால் கைகளைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், கைகளில் உள்ள கருமை மறையும்.

பால் பவுடர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு பௌலில் 4 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் கைகளில் அந்த கலவையை தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் கைகளைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால், கைகளில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பௌலில் ஆரஞ்சு தோல் பொடியை எடுத்து, மாட்டுப் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அதன் பின் அந்த கலவையை கருமையாக உள்ள கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி 5 நிமிடம் மென்மையாக தேய்த்து, ஈரத்துணியால் துடைத்து எடுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளது. இது எப்பேற்பட்ட சரும கருமையையும் போக்கும் சக்தி கொண்ட ஓர் அற்புதமான பொருள். அதற்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, கருமையாக இருக்கும் இரு கைகளிலும் 10-15 நிமிடம் தொடர்ந்து தேய்க்க வேண்டும். அதன் பின் நீரா கைகளைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகள் நல்ல நிறத்தைப் பெறுவதைக் காணலாம்.

கற்றாழை மற்றும் இஞ்சி
கற்றாழையில் சரும செல்களுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் கற்றாழை சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் போக்கும். இஞ்சிக்கும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் சக்தி உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து சருமத்திற்கு பயன்படுத்த, கைகளில் உள்ள கருமை நீங்கும்.

செய்முறை:

-சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அதில் சில துளிகள் இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

-பின் அதனை இரண்டு கைகளிலும் தடவி 15 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

-பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் கைகளைத் துடைத்து எடுக்க வேண்டும்.

-இப்படி தினமும் செய்து வர, கைகளில் உள்ள கருமை போவதைக் காணலாம்.

ஆயில் மசாஜ்
கைகளை வெள்ளையாக்க முயற்சிக்கும் போது, ஈரப்பசையூட்டுவது என்பது மிகவும் முக்கியம். அதற்கு இரவில் படுக்கும் முன் ஆயில் மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். இதனால் கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும். அதுவும் குறிப்பிட்ட எண்ணெய்களை ஒன்றாக சேர்த்து கலந்து, கைகளுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி, அதில் 2 இன்ச் அதிமதுர வேரை சேர்த்து லேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது இறக்கி, அதிமதுர வேரை வெளியே எடுத்து, அதைப் பிழிந்துவிட வேண்டும். பின் இரவில் படுக்கும் போது அந்த எண்ணெயை கருப்பாக இருக்கும் கைகளில் தடவி 10-15 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த துணியால், கைகளைத் துடைத்து எடுக்க வேண்டும். அதன் பின் சோப்பு எதுவும் பயன்படுத்தி கைக்கழுவாமல் தூங்குங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், 3-4 நாட்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் எடை வேகமாக குறைய சுடுநீரில் ஊற வைத்த ஆளி விதை, குடித்தால் கிடைக்கும் இதர நன்மைகள்!
Next articleசாப்பிட்டதும் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டல் அதை உடனடியாக குறைக்க இயற்கை வழி!