கே.ஜி.எப் ஹீரோவுக்கு வில்லனாகிய ஷாம் !

0

சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் `சூர்யவம்சி’. பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான வேடத்தில் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அத்துடன், தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கேஜிஎப் சாப்டர் 1.. இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.. ராதிகா யஷ்சை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார். ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்சுக்கு தெரிய வருகிறது. ஷாம் ஒரு மிகப்பெரிய டான்.. அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை ஜனரஞ்சகமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ்ராவ்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த தாந்திரீக பரிகாரத்தை ஒருமுறை செய்து பாருங்கள் உங்கள் கடன் பிரச்னை தீருமாம்!
Next articleஅடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிக்கும் தல அஜித் !!