கேப்டன் விஜய்காந்த் சர்வதேச சாதனை செய்த விஜய்யைப் பார்த்து என்ன கூறியுள்ளார் தெரியுமா?

0
205

சர்வேதச அளவில் ஆண்டுதோருக்கும் IARA என்ற விருது வழங்கும் விழா நடைபெற்று வந்தது. இந்த விழாவில் சர்வேதேச அளவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பெற்றது.

அதில் இந்த ஆண்டு உலகளவில் சிறந்த நடிகர்கள் பட்டியலில்மெர்சல் படத்தில் நடித்ததற்காக 2018ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஜய்யின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகரும், தே மு தி கா தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக “சிறந்த சர்வதேச நடிகர்” என்ற விருதை வென்ற நடிகர் விஜய் @actorvijay அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். (1/2)

அந்த பதிவில், சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக “சிறந்த சர்வதேச நடிகர்” என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் குடும்பத்திற்கும், நடிகர் விஜயகாந்த் குடும்பத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் , நடிகர் விஜயகாந்தை சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் அறிமுகம் செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து பல்வேறு படங்களை இயக்கினார் எஸ் ஏ சந்திரசேகர்.

அதே போல நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும், விஜய்க்கு திரைத்துறைக்கு ஒரு சிறந்த எண்ட்ரியாக அமைந்தது விஜய்காந்த் நடித்த செந்தூர பாண்டி என்ற படம் தான்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சர்வதேச சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கேப்டன்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: