கென்யாவில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு: ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா?

0
297

கென்யாவில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய பிளவின் காரணமாக பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாக பிரியலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சமீபத்தில் பல மைல்கள் நீளமான பிளவு ஒன்று தென் மேற்கு கென்யாவில் தோன்றியுள்ளது.

இந்தப் பிளவின் காரணமாக Nairobi-Narok நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்ததோடு மட்டுமில்லாமல் அப்பகுதியில் பல நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

இதனால் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாக பிரியலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமியானது மாற்றங்களுக்குட்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கண்டமாகும். ஆனால் சில மாற்றங்கள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. பூமியின் அடுக்குகளில் ஒன்றான lithosphere என்னும் அடுக்கு, பல தட்டுக்களால் ஆனது.

அந்த தட்டுகள் நகர்ந்துகொண்டே இருக்கும். இந்த நகர்வு எதனால் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நீரோட்டங்களும் தட்டுகளில் அடியில் உருவாகும் விசைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இந்த விசைகள் சில நேரங்களில் தட்டுகள் உடைவதற்கும் காரணமாக அமையலாம். இதன் விளைவாக பிளவுகள் ஏற்பட்டு புதிய எல்லைகளே உருவாகலாம்.

தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு இதற்கு ஒரு உதாரணமாகும். இந்தப் பிளவு 3,000 கிலோமீற்றர் தொலைவுக்கு ஏற்பட்டுள்ளது. வடக்கே Gulf of Aden முதல் தெற்கே Zimbabwe வரை நீண்டுள்ள இந்த பிளவு ஆப்பிரிக்க தட்டை Somali மற்றும் Nubian தட்டுகள் என்னும் சமமற்ற இரு தட்டுகளாக பிரித்துள்ளது.

இந்தப் பிளவு அதிகரித்துக் கொண்டே போகும் பட்சத்தில் பல மில்லியன் ஆண்டுகளில் ஆப்பிரிக்கா இரண்டாக பிரியும் நிலை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: