குழந்தையின் தொட்டிலைத் தேடிவரும் மிகக் கொடிய பாம்புகள்!

0
270

குயின்லாந்தில் உள்ள வீடொன்றில் குழந்தையை உறங்கச் செய்யும் தொட்டிலில் உலகின் கொடிய விசத்தினையுடைய பாம்பு ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் உள்ள குழந்தையின் தொட்டிலில் கிழக்கத்தைய பழுப்பு பாம்பு (Eastern Brown Snake) காணப்பட்டுள்ளது.

குறித்த தொட்டிலில் தனது குழந்தையை உறங்க வைப்பதற்காக அறையின் உள்ளே நுழைந்த தாய் தொட்டிலில் கண்ட காட்சியால் அதிர்ச்சியடைந்தார்.

ஒரு நீளமான கிழக்கத்தைய பழுப்பு பாம்பு அந்த தொட்டிலில் இருந்த துணியின் கீழிருந்து நெளிந்துகொண்டிருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்துப்போன குறித்த பெண் அறையை விட்டு அலறியடித்தபடி வெளியே ஓடியுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து பேசிய அலீஷா மிட்ச்லி எனும் அந்த தாய்,

“அது எவ்வாறு அறைக்குள் வந்தது என தெரியவில்லை. ஆனால் யன்னலால்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தொட்டிலில் பாம்பு இருந்த நிலையை என்னால் வார்த்தையால் விளங்கப்படுத்த முடியவில்லை. அந்த சந்தர்ப்பத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.” என்றார்.

கருப்பு மாம்பா பாம்புகளுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது கொடிய விசத்தினைக் கொண்ட கிழக்கத்தைய பழுப்பு பாம்புகள் குயின்லாந்தில் அதிகமாக காணப்படுவதாகவும் இதனால் வருடாவருடம் பல எண்ணிக்கையானோர் தீண்டப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் பாம்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதுடன் வீட்டில் உள்ள கதவுகளை எந்த நேரமும் மூடி வைக்குமாறு அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை குழந்தையை உறங்க வைக்கும் தொட்டில் தொடர்பில் மிகுந்த அக்கறை எடுக்குமாறும் அவற்றுள் காணப்படும் சிறுநீர் தோய்ந்த துணிகளின் மணம் விஷப் பாம்புகளை ஈர்க்கும் தன்மையினைக் கொண்டவை என்பதனால் கூடிய கவனமெடுக்குமாறும் தாய்மார்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: