குழந்தைகளை தனிமையில் விடாதீர்கள் மனஅழுத்த பிரச்சனையின் விகிதம் வேகமாக உயர்கிறது!

0
393

மனஅழுத்தம் என்பது உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த பிரச்சனையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வேறுபாடின்றி அவர்களின் வாழ்வியல் சூழ்நிலைகளுக்கேற்ப மனநல பாதிப்பு சிறிய அளவில் இருந்து பெரிய அளவு வரை இருக்கின்றது.

இந்தியாவை பொறுத்த வரையில் இந்த பிரச்சனையானது கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது என்று ஆய்வின் முடிவில் தகவல் வந்துள்ளது., இந்த மனநல பாதிப்பானது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை கூட விட்டுவைக்காமல் ஒரேமாதிரியான பாதிப்பை ஏற்படுத்திக்கிறது.

இந்தியாவை பொறுத்த வரையில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 50 விழுக்காடு நபர்கள் இந்த பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடு இந்தியாதான். ஆனால் அந்த இந்தியாவில் உள்ள இளைஞர்களின் மனநல பாதிப்படைந்தவர்கள் சுமார் 75 விழுக்காடு அளவிற்கு உள்ளனர்.

இந்த பாதிப்பில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 50 விழுக்காடு அளவிற்கு பாதிப்படைந்துள்ளனர் என்று ஆய்வின் முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் சிறு குழந்தைகள் தனிமையில் விடப்படுவதாலும், பெற்றோர்களின் அரவணைப்பு சரிவர கிடைக்காததாலுமே குழந்தைகளுக்கு இந்த பாதிப்பானது ஏற்படுகிறது., இளைஞர்கள் பல்வேறு சிந்தனைகளை தங்களது மனதிற்குள் அடைத்து வைத்து வெளியே கூற இயலாமல் தேவை இல்லாமல் சிந்திப்பதன் காரணமாகவே இந்த பாதிப்பு இளைஞர்களுக்கு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: