குற்றச்சாட்டில் கைதாகிய இலங்கையருக்கு! அவுஸ்திரேலியாவில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

0
315

அவுஸ்திரேலியாவின் முக்கிய அரசியல்வாதிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதாகிய இலங்கையர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்று அவுஸ்திரேலியாவின் மத்திய உள்ளூர் நீதிமன்றத்தில் முன்லைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 25 வயதுடைய மொஹமட் நிசாம்தீன் என்ற இலங்கையர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்து தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முக்கிய அரசியல்வாதிகளை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞருக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: