குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி! 2020 இல் இந்த 3 ராசியையும் துரதிர்ஷ்டம் ஆட்டிப்படைக்க போகிறது?

0
1490

வருட இறுதியை நோக்கி மிக விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்த வருடம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குள்ளும் இருக்கிது.

நமது எதிர்காலத்தை அறிவதற்கு நம் முன்னோர்கள் வகுத்த ஒரு அற்புத வழிதான் ஜோதிடம். ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது ராசியைக் கொண்டு

நமது வருங்காலத்தை கணக்கிடலாம்.

வரப்போகிற வருடம் சில ராசிக்காரர்களுக்கு அதிசயங்களையும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ச்சியையும் தர காத்திருக்கிறது.

2020 இல் மூன்று ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமாக இருக்கப்போகிறது. அதனை முன் கூட்டியே அறிந்து கொண்டு மிகவும் புத்திசாலித்தனமாக செயற்படுங்கள்.

மேஷம்
இந்த வருடம் உங்களுக்கு தடைகள் நிறைந்த வருடமாக இருக்கும், எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்க நேரிடலாம். இது மட்டுமின்றி நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உறுதியற்றத் தன்மையுடன் இருக்கும்.

2020 ஆம் ஆண்டில் பெரிய மாற்றங்களுக்கான எந்த பெரிய முயற்சியும் எடுக்காமல் நிதானமாக இருக்க வேண்டும். மோசடிகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது எனவே முதலீடுகளில் கவனம் அவசியம்.

பயணங்கள் செய்யும் முன் நன்கு ஆலோசிக்கவும், தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால் மட்டும் பயணம் செய்யவும். விபத்துகளில் சிக்க அதிக வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் எதனையும் சமாளிக்க தங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. குரு சனிபகவானுக்கு எதிர்க்க இருப்பதால் காரியங்கள் அனைத்தும் கடினமானதாக இருக்கும்.

உங்களுக்கு கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களின் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடப்பது உங்களுக்கு நல்லது. உங்களை நீங்கள் அதிகம் நம்புவதுதான் இந்த ஆண்டில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடமாகும்.

ஆபத்தான முதலீடுகள் எதிலும் ஈடுபட வேண்டாம். புதிதாக ஒருவரை நம்புவதற்கு முன்னர் தீர ஆலோசிக்கவும்.

துலாம்
மற்றவர்களை நம்புவதுதான் உங்களுக்கு இந்த வருடம் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். இந்த வருடம் உங்களுக்கு மிகுந்த துரதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப்போகிறது.

எனவே அதிர்ஷ்டத்தை நம்பி செய்யும் எந்த காரியத்திலும் இந்த வருடம் இறங்க வேண்டாம்.

குறிப்பாக முதலீடுகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை அவசியமாகும். இந்த காலக்கட்டம் உங்கள் வாழ்க்கையில் தடுமாறும் காலமாகும், எனவே ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட வேண்டாம்.

காதல் வாழ்க்கையில் வருடத்தில் இரண்டாம் பாதியில் பெரிய புயல் ஏற்படும். தவறான வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள், மற்றவர்களின் சத்தியங்களை நம்பாதீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை !
Next articleதனுசு ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோக காலம் ! 2020 புத்தாண்டு ராசி பலன்கள் !