குபேரனின் பார்வை உங்க பக்கம் திரும்பி செல்வம் வந்து சேர! இவற்றையெல்லாம் செய்தால் போதும்!

0
323

செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் என கருதப்படுகின்றது.

இன்றைய காலத்தில் பலருக்கும் கோடி கோடியாய் செல்வம் பெருக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்படி பணக்காரர் ஆவது குபேரனின் அருள் நமக்குக் கிடைக்குமா என்றும் ஏங்குகின்றனர்.

செல்வத்தை ஈர்க்க சில வழிகள் உள்ளன. அதில் குபேரனின் அருளை பெருவது முக்கியமான ஒரு விடயமாகும்.

அந்தவகையில் குபேரனின் அருளை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

குபேரன் அருள்பெற மாலை வேளையில் 5 மணி முதல் 7 மணி வரை குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
குபேர தீபத்தை வார வாரம் வியாழக்கிழமைகளில் ஏற்றிவர எல்லா வளங்களும் கிடைக்கும்.

வியாழக்கிழமை மாலை வேளையில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து, பச்சரிசி மாவினால் கோலம் போட்டு அதற்கு செம்மண் பட்டை இட்டு அழகுபடுத்த வேண்டும். நிலைப்படிக்கு மஞ்சள் தெளித்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, ஒரு பகுதியில் மஞ்சளும் மற்றொரு பகுதியில் குங்குமமும் தடவ வேண்டும்.

நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை பழத்தையும், மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் இருபுறமும் வைக்கவும். நிலைப்படிக்கு இருபுறமும் பூ வைக்க வேண்டும்.

தினமும் எலுமிச்சை பழத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். காய்ந்த பழத்தை கால்மிதி படாத இடமாக பார்த்து போட வேண்டும்.

வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்கவேண்டும்.

முதலில் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: