குடி நீருக்கான‌ கட்டணங்களை உயர்த்துவது குறித்து தீர்மானம்!

0

குடி நீருக்கான‌ கட்டணங்களை உயர்த்துவது குறித்து தீர்மானம்!

நீர்க் கட்டணங்களை உயர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டுப் பாவனைக்கான நீர்க் கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பயன்படுத்தும் நீரின் அளவு, பதினைந்து அலகுகளை விடவும் அதிகமானால் கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், 15 அலகுகளை விடவும் அதிகமாக நீர் பயன்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த கட்டணத்திலும் மாற்றம் செய்யப்படும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு கடந்த ஆறு ஆண்டு காலமாக நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கைத்தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு இந்த கட்டண அதிகரிப்பு அமுலாகாது என அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரித்தானியாவின் தலைநகரில் 12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்கள்!
Next articleகால வரையறை இன்றி சீல் வைத்து மூடப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொதுச் சந்தை!