குடிபோதையில் பள்ளியில் ரஜினிகாந்த் செய்த அட்டூழியம்!

0
361

இந்திய மாநிலமான தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் மது அருந்திவிட்டு ஆசிரியர் ஒருவர் பள்ளி வகுப்பறையில் படுத்து உருளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் ரஜினிகாந்த். அவர் நேற்று மதிய உணவிற்காக சென்றவர் திரும்பி வரும்போது முழு போதையில் வந்துள்ளார். மேலும் போதையில் எழ முடியாமல் வகுப்பறையில் படுத்து உருண்டுள்ளார்.

அவரின் செயல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள், மாணவர்கள் போதையில் சுயநினைவின்றி கிடந்த ரஜினிகாந்தை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்க முடியாமல் போதை மயக்கத்தில் புலம்பிக்கொண்டே இருந்தார்.

இது குறித்து சக ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாவட்ட கல்வி அதிகாரி ஷகிதா மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியரான ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுத்த உயரதிகாரிகள், அவரை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: