கிருத்திகாவின் மரணத்திற்கு இதுதான் காரணம்!

0
349

திருப்பூரில் கிருத்திகா என்பவர் சுகப்பிரசவத்தில் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பகாலத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல், யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த காரணத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்படி ஒவ்வொரு மாதமும் உணவு உட்கொண்டு வந்துள்ளார் கிருத்திகா.

இதன்படி பிரசவ வலி ஏற்படும்போது, தனது நண்பன் பிரவின் உதவியுடன் கணவர் கார்த்திகேயன் பிரசவம் பார்த்து பெண் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.

ஆனால், மயக்க நிலைக்கு சென்ற கிருத்திகா உயிரிழந்துவிட்டார், தற்போது பெண் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது.

இதுகுறித்து கிருத்திகாவின் தந்தை கூறியதாவது, என் பொன்னு கர்ப்பமானதுல இருந்தே மகள், மருமகன் இரண்டு பேர் கிட்டயும் மருத்துவமனைக்கு போக சொன்னேன். ஆனா அவங்க அதுக்கு ஒத்துக்கல.

வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறதா சொன்னாங்க, மருமகனோட நண்பரும் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தார், கடைசியில் இப்படி ஆகிவிட்டது என கூறியுள்ளார்.

மகப்பேறு மருத்துவர் பூங்கோதை செல்வராஜ் கூறியதாவது, வீட்டில் பிரசவம் பார்ப்பது தவறில்லை. ஆனால் அதற்குத் தகுதியான நபர்கள் இருக்க வேண்டும். பிரசவ நேரத்தில் ரத்தப்போக்கு என்பது முக்கியப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

பிரசவ நேரத்தில் 500 மில்லி முதல் 1 லிட்டர் வரை ரத்தப்போக்கு இருக்கும், அப்போது அந்த பிரச்சனையை கையாளக்கூடிய மருத்துவர்கள் மட்டுமே பெண்னை சீரான நிலைக்கு கொண்டுவர முடியும்.

கிருத்திகா நிச்சயம் ரத்தப்போக்கு காரணமாகத்தான் இறந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: