Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan சனியனே என்று திட்டுபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

சனியனே என்று திட்டுபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

0
8442

நமது வாழ்க்கை முறையில் மந்தமாக, சோம்பலாக இருப்பவர்களை நாம் சனியனே என்று திட்டுவது வழக்கம்.

ஆனால் அவ்வாறு சனியனே என்று திட்டும் போது, உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா?

சனியனே என்று திட்டினால் என்ன நடக்கும்?

சனியனே என்று யார் திட்டுகிறாரோ, அவர் தன்னை கேளி செய்வதாக சனீஷ்வரர் கருதி, அவர் மீது தனது பார்வையை செலுத்தி விடுவார் என்று கூறுவது ஒரு ஐதீகமாக உள்ளது.

சனீஷ்வரர் என்பவர் மந்தகதி உடையவர் என்பது ஒரு இயற்கையான விதியாக உள்ளது.

ஏனெனில் சனி என்ற கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாக சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வது உண்டு.

எனவே நமது வீட்டில் உள்ள குழந்தைகள் மந்தமாக இருந்தால், அவர்களின் பெயரில் சனிஷ்வரனுக்கு ஒரு அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.

மந்தகதி உடையவர்களை சனியனே என்று திட்டாமல், அவர்களை பக்குவமான திருத்த நினைப்பவர்களுக்கு சனீஸ்வரனின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் உடலுக்குள் தீயசக்திகள் உள்ளது உறுதியாகிவிடும்!

எதிர்மறை சக்திகள் என்பது நமது முன்னேற்றத்திற்கு தடைவிதித்து நமது மகிழ்ச்சியை குழைக்கும் சக்தியாகும். பொதுவாக எதிற்மறை சக்திகள் என்றால் பில்லி, சூனியம் என்றுதான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், ஆனால் நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலை கூட நம் உடலுக்குள் எதிற்மறை சக்திகளின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

நம் உடலுக்குள் எதிர்மறை சக்திகள் அதிகரித்த விட்டால் பயம், சந்தேகம், பதட்டம், கோபம் என நம் முன்னேற்றத்தை தடுக்கும் அனைத்தும் அதிகரித்துவிடும். நமது ஆராவிற்குள் ஏற்படும் இந்த எதிர்மறை மாற்றங்கள் நம்மை மட்டுமின்றி நம்மை சார்ந்தவர்களையும் பாதிக்கும். இந்த பதிவில் உங்கள் உடலுக்குள் எதிர்மறை சக்திகள் இருந்தால் தோன்றும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நமது எதிர்மறை சிந்தனைகள் பெரும்பாலும் நமது குழந்தை பருவம் மற்றும் கடந்த கால வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டவை ஆகும். நமது குழந்தை பருவ துயரங்கள் நமது நிகழ்கால முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்க இயலும். நமது குழந்தை பருவ கசப்பான அனுபவங்கள் அவ்வளவு விரைவில் நம்மை விட்டு சென்றுவிடாது, அவை நம் ஆன்மாவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை சரியான முறையில் வெளியே கொண்டு வரவேண்டும்.

நமது கடந்த கால வாழ்க்கை பொதுவாக நமது ஆழ்மனத்திற்குள் புதைந்திருக்கும். ஆனால் அவை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த கால வாழ்க்கை உங்கள் நிகழ்கால வாழ்க்கையில் தற்காலிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதன்மூலம் நீங்கள் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். அந்த பாடத்தை நீங்கள் முழுமையாக கற்றுக்கொண்டால் அவை தானாக விலகிவிடும்.

இந்த எதிர்மறை சக்திகள் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளதோ அல்லது சாபம் கொடுக்கப்பட்டதோ உங்களின் அதிர்ஷ்டமா முழுமையாக உங்களை விட்டு போன பிறகுதான் உணருவீர்கள். இந்த எதிர்மறை சக்திகளின் பாதிப்புகள் இருக்கும்போது உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இதனை எடுப்பது மிகவும் சுலபமாகும்.

இவற்றை மிகவும் எளிதில் கண்டறிந்து விடலாம். நீங்கள் நீங்களாகவே உணரவில்லை என்றாலோ, உங்களின் எண்ணங்கள் உங்களுடையது போல இல்லாமல் இருந்தாலோ, உங்களின் தூக்கம் மற்றும் சாப்பிடும் பழக்கங்களில் மாறுதல்கள் இருந்தாலோ உங்கள் ஆராவில் பாதிப்பு உள்ளதாக அர்த்தம்.

இது மற்றவர்களின் எண்ணங்களும், சிந்தனைகளும் உங்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆகும். இவர்கள் நீங்கள் நன்கு பழக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள் ஆனால் அவர்கள் மூலம் உங்கள் ஆற்றல் உங்களுக்கே தெரியாமல் உறிஞ்சப்படும்.இது ஒருவரின் பின்பக்க சக்கரத்தை பாதிக்கும், மேலும் இது நேர்மறை சக்திகளை பெறுவதிலும் பிரச்சினையை ஏற்படுத்தும். பொதுமொழியில் இதனை “கண்திருஷ்டி” என்று கூறுவார்கள்.

இதனையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும்போது மட்டும் நீங்கள் சோர்வாகவோ அல்லது எரிச்சலாகவோ உணர்வீர்கள். மற்ற இடங்களில் நீங்கள் எப்போதும் போலவே இருப்பீர்கள். அவ்வாறு இருந்தால் உடனடியாக வீட்டை மாற்றிவிடுங்கள் அல்லது அதற்கேற்ற பூஜைகளை செய்யுங்கள்.

இதற்கு நிறைய பயிற்சியும், அர்ப்பணிப்பும் மற்றும் சரியாக முடிவெடுக்கும் திறனும் வேண்டும். எப்போதும் “என்ன தவறாக முடியும்?” என்பதற்கு பதிலாக “என்ன சரியாக முடியும்?” என்று பார்க்க வேண்டும். உங்கள் எண்ணங்களும், பேச்சுக்களும் எதிர்மறையாக செல்லும்போது உங்களை நீங்களே கட்டுப்படுத்த வேண்டும்.

ஒரு இடம் மோசமான கடந்த கால வரலாற்றை கொண்டிருந்தால் அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. அது சிறைச்சாலையாக இருக்கலாம் அல்லது யாராவது துர்மரணம் அடைந்த இடமாக இருக்கலாம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வாழ்ந்த இடமாக இருக்கலாம். இதுபோன்ற இடங்களில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருக்கும்.

Previous articleமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்? அதில் மறைந்திருக்கும் அதிசயிக்கும் உண்மை ரகசியம்!
Next articleமூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!