கால் ஆணியை காணாமல் போக்கும் பூண்டு எப்பிடின்னு தெரியுமா?

0
5120

கால் ஆணி நோய் காலில் ஏற்படும் அலர்ஜி , அதீத அழுத்தம் , உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் ,அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகள் பராமாிக்கப்படாத பாதங்கள் மற்றும் பொருந்தாத காலணிகள் என பல காரணங்களால் சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறாா்கள்.

கால் பாதத்தில் வெள்ளை, மஞ்சள் போன்று நிறமாற்றம் இருக்கும். தோல் கடினமானதாக ஆணி குத்தினால் எப்படி வலி ஏற்படுமோ அதேபோல் இருக்கும். ஆகவே நாட்டு மருத்துவத்தில் கால் ஆணியை எவ்வாறு போக்கலாம் என பார்க்கலாம்.

* துாங்க செல்லும் முன் ஒரு பல்லு பூண்டை எடுத்து நசுக்கி கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விடவும். இப்படி செய்து வந்தால் கால் ஆணி காணாமல் போய்விடும்.

* குப்பைமேனி, வேப்பிலை ஆகியவை மருத்து குணங்களை கொண்டவை. எனவே இவை இரண்டையும் அரைத்து சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கால் ஆணி உள்ள இடத்தில் இதனை இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்னை சரியாகும்.

* கொடிவேலி (சித்திரமூலம்) வேர்ப்பட்டையை அரைத்து ஒரு சிறிய அளவு எடுத்து தூங்குவதற்கு முன் கால் ஆணி மேல் பூசி வந்தால் மூன்று நாளில் குணம் கிடைக்கும். இதனால் சிலருக்கு அந்த இடத்தில் புண் உண்டாகும். அதற்கு விளக்கெண்ணெயில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து, புண் உள்ள இடத்தில் பூசிவர புண் மாறும் கால் ஆணியும் காணாமற்போகும்.

* விளக்கெண்ணெய், வறுத்து பொடி செய்த கடுகு , மஞ்சள் பொடி சேர்த்து காய்ச்சவும். பின்னா் இரவு தூங்க போகும் முன்பு கால்களை சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவிவந்தால் , கால் ஆணி குணமாகும்.

* நீர்த்த சுண்ணாம்பு நீருடன் இஞ்சிச் சாற்று கலந்து பூசி வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

* மஞ்சள்பொடி , வசம்பு, கைப்பிடி மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி இரவு முழுவதும் விட வேண்டும்.ஆணி உதிா்ந்து வரும் வரை இதை செய்ய வேண்டும்.

* விளக்கெண்ணெயுடன், கொய்யா இலை பேஸ்ற், மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து காய்சி இதை கால் ஆணி மீது பூசிவர பிரச்னை சரியாகும்.

* காலுக்கு மென்மையான காலணிகள் அணிய வேண்டும். காலணி இல்லாமல் வெளியில் செல்ல கூடாது. காலில் ஏதேனும் குத்தினால் உடனே அதை நீக்கி விட வேண்டும். கால்களை துாங்க செல்லும் முன் நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: