கால்களை இழந்த காதலன்.. காதலி செய்த அதிர்ச்சி காரியம்!

0
310

இந்திய மாநிலமான தமிழகத்தில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த காதலனை பெற்றோர் எதிர்பை மீறி பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய்யும், உதகை மசினகுடியைச் சேர்ந்த ஷில்பாவும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளனர்.

இருவரது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் ரயிலிலிருந்து தவறி விழுந்து விஜய்க்கு இடது கால் துண்டானது.

வலது கால் செயலற்றுப் போனது. வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜய்யை, ஷில்பா இன்று திருமணம் செய்து கொண்டார். மாற்றுத்திறனாளி என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதும், காதலித்தவரையே ஷில்பா திருமணம் செய்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: