உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், கால்வலி, கால் மரத்து போதல், சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனை தடுக்க சில உணவுகளை சாப்பிட்டாலே போதும்.
கால்வலியை தடுக்க சாப்பிட வேண்டியவை?
தினமும் தேனில் ஊறிய பூண்டை சாப்பிட்டு வந்தால், ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பை கரைத்து காலின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.
தினமும் காலையில் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த நீரை குடித்து வர காலில் தேங்கும் ரத்தோட்டட்தை சீராக்கி கால்வலி வராமல் தடுக்கலாம்.
தினமும் சிறு துண்டு அளவு டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் அது ரத்த நாளங்களை விரிவாக்கி, ரத்தஓட்டத்தை சீராக்குகிறது.
தேங்காய் எண்ணெயை இரண்டு ஸ்பூன் அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து அதை லேசாக சூடாக்கி கால்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சூடான நீரில் மிளகுத்தூள் கலந்து குடித்து வர அது உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கால்வலி, தலைவலி, அதிக குளிர் ஆகியவற்றை போக்க உதவுகிறது.
தினமும் சூடான பாலில் மஞ்சள் கலந்து தினமும் குடித்து வர, அது கால்வலி பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வளிக்க உதவுகிறது.
கோதுமையில் மாவுச்சத்து குறைவு என்பதால், அது உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுத்து, ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.
மாதுளைச் சாறு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து, ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைத் தூண்டி, ரத்தம் உறைதல் பிரச்னை வராமல் தடுக்கிறது.
நன்னாரி வேர், உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து ரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தமாகும்.
பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து ரத்தத்தை சுத்தமாக்க உதவுகிறது.
கற்றாழை ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.