கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜெய் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

0
886

நடிகர் ஜெய் கார் விபத்தில் சிக்கியதில் அவருக்கு சிறு காயம் மட்டும் ஏற்பட்டு உயித் தப்பியுள்ளார்.

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் பார்ட்டி படத்தில் நடித்து வருகிறார். இவர் இன்று படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டிலிருந்து கிளம்பி அடையாறு பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தர்.

அப்போது அவரின் கார் பாலத்தின் ஒரு இடத்தில் மோதியது. ஆனால், சிறு காயம் மட்டும் ஏற்பட்டு அவர் உயிர் தப்பினார். அதன் பின் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: