கார்த்திகை நட்சத்திரம் – குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் 04.10.2018 முதல் 04.11.2019 வரை!

0

நல்ல உள்ளத்தால் உயர்ந்த நிலையைப் பெறும் கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் தந்தைக்கும் உங்களுக்கும் இருந்த பகைமை உணர்வு மாறும். தொழிலிலும் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்னைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்னைகள் இருந்திருக்கும். அதிலும் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் விலகி மன நிம்மதி அடைவீர்கள்.

தொழில் செய்பவர்கள் தங்கள் காரியங்களை தாங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரயத்தையும் குறைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொடங்க சூழல் உருவாகும். உத்யோகஸ்தர்களுக்கு நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தவறைத் தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்க வேண்டாம்.

பெண்களுக்கு நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்ற அனைத்தும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேர்வில் வெற்றி பெறலாம். அரசியல்துறையினர் தொகுதி மக்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினர் இந்த கால கட்டத்தினை பயன் படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பு முனையான காலமாக இருக்கும்.

பரிகாரம்:

மாதம்தோறூம் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளிப்பூ மாலை சாற்றுங்கள்.

Previous articleபரணி நட்சத்திரம் – குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் 04.10.2018 முதல் 04.11.2019 வரை!
Next article06.12.2018 இன்றைய ராசிப்பலன் – வியாழக்கிழமை!