காரைதீவில் விசித்திர வாழை மரம்!!

0
879

காரைதீவில் விசித்திர வாழை மரம் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைதீவு- 1ஆம் பிரிவு விபுலானந்த வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த வாழை மரம் காணப்படுகின்றது.

இந்த வாழை மரத்தின் அடியிலிருந்து 2 அடி உயரத்தில் இடைநடுவில் வாழைக்குலை தள்ளியுள்ளது.

6 அடி மெலிந்த உயரமான வாழை மரத்தின், அடியிலிருந்து 2 அடி உயரத்தில் சுமார் 4 சிறிய சீப்புகளுடன் இக்குலை தள்ளியிருக்கிறது.

வாழை மரத்தின் மேற்பாகத்தில் குலை தள்ளுவதே வழமை. எனினும் இந்த வாழைமரம் சற்று வித்தியாசமாக காணப்படுகின்றது.

இடைநடுவில் குலைதள்ளி உள்ள குறித்த அதிசயத்தை அப்பகுதியில் இருக்கும் மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: