காரணம் அஜித்தின் தந்தை தானாம், கமல் அழைத்தும் விழாவிற்கு வராதா அஜித்!

0
928

காரணம் அஜித்தின் தந்தை தானாம், கமல் அழைத்தும் விழாவிற்கு வராதா அஜித்!

சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலகநாயகன் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் அவர்கள் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமா உலக நாயகனாக திகழ்கிறார். மேலும், இவர் சினிமா துறையில் நுழைந்து 60 ஆண்டுகள் ஆகியது. மேலும்,இவர் சினிமா துறையில் புரிந்த பல சாதனைகளை கொண்டாடும் வகையிலும், கமல்ஹாசனை கவுரவிக்கும் வகையில் “உங்கள் நான்” என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மேலும், இந்த விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமலுடன் 80 காலகட்டங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகள், அவருடைய நண்பர்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இவர்களோடு ஆயிரக்கணக்கான பொது மக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயங்கரமாக கொண்டாடி வந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும்,கமல்ஹாசன் அவர்களின் 65வது பிறந்த நாளை முன்னிட்டும்,60 ஆண்டு கலையுலக சாதனையை கொண்டாடும் வகையில் ‘உங்கள் நான்’ நிகழ்ச்சி நடந்தது. மேலும்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல சினிமா பிரபலங்கள் கமல்ஹாசனை பாராட்டியும், வாழ்த்தியும் புகழ்ந்து தள்ளினார்கள். மேலும்,இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி, கார்த்தி,ஜெயம் ரவி, வடிவேலு,விக்ரம் பிரபு, லதா, ஸ்ரீபிரியா, மீனா, ரேகா, ராதா, அம்பிகா, மனிஷா கொய்ரா,தமன்னா, லிசி, குட்டி பத்மினி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன்,எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர்,பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

பிறந்தநாளன்று வைரலாகும் புகைப்படம். அதாவது இந்த நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த திரையுலகமே திரண்டு வந்து கலந்து உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அஜீத், விஜய் ஆகிய இருவருமே கலந்து கொள்ளவில்லை. மேலும், இவர்கள் இருவர் மீதும் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். அதுமட்டும் இல்லாமல் கமல் போன்ற ஒரு மாபெரும் கலைஞனைக் கவுரவிக்கும் விழாவில் இவர்கள் கலந்து கொள்ளாததை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் மட்டும் அஜித்துக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது என அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும், இவர்கள் இருவரும் வராதது குறித்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து இவர்களின் இரு தரப்புமே மௌனம் சாதித்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “தளபதி 64” படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று தளபதி 64 படத்தை தயாரிக்கும் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. மேலும், அஜித் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை, அதுமட்டுமில்லாமல் அஜித் அவர்கள் வலிமை படத்தில் பிஸியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்தே. ஆனால்,இது குறித்து வலிமை வட்டாரமும் எந்த வித விளக்கமும் தரவில்லை. ஆனால், அஜித் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும், அஜித் அவர்களின் தந்தை உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதால் கடைசி நேரத்தில் அவர் வர முடியவில்லை என்றும்சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுகைப்படத்தால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள், சனம் ஷெட்டியுடன் தர்ஷனின் காதல் தொடர்கிறதா?
Next articleஅனைவரும் ஷாக், கமல் 60 விழாவில் வடிவேலு குறித்து பேசிய இயக்குனர் ஷங்கர்!