எச்சரிக்கை! இந்த வகையான உணவுகள் உடலினுள் தீங்கு விளைவிக்கும் புழுக்களை உருவாக்கும்!

0
6628

நம்மில் பலரும் அன்றாடம் ஒரே வகையான உணவுகளைத் தான் சாப்பிடுகிறோம். ஆனால் அப்படி சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பது தெரியுமா? அதிலும் பலருக்கும் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை அன்றாடம் சிறிது சாப்பிட்டாலும், அது உடலினுள் குறிப்பிட்ட வகையான புழுக்களை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

இறைச்சிகளின் மூலம் உடலினுள் நுழையும் புழுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் அவை உடலினுள் நுழைந்த பின், மெதுவாக திசுக்கள், கண்கள் மற்றும் ஏன் மூளைகளில் கூட நுழைந்து தீங்கை உண்டாக்கும்.

அட்டென்புரூக்ஸ் மருத்துவமனை

கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள அட்டென்புரூக்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ குழுவினர், ஒரு நோயாளி கடுமையான தலைவலியுடன் தங்களது மருத்துவமனைக்கு ஒருமுறை வந்ததாக கூறினர்.

மறுமுறை

அதே நோயாளி சில நாட்கள் கழித்து மீண்டும் ஏதோ சில சோதனைக்காக வந்திருந்தார். அப்போது அவர் வேறு சில புதிய அறிகுறிகள் தென்படுவதாக புகார் அளித்தார்.

ஸ்பைரோமெட்ரா எரினாசியூரோபை

மேலும் இந்த நோயாளி சமீபத்தில் சீனா, தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு சென்று வந்ததாக கூறினார். இவர் சென்று வந்த நாடுகளில் தான் ஸ்பைரோமெட்ரா எரினாசியூரோபை என்னும் ஒட்டுண்ணி அதிகம் பரவியிருப்பதாக சில வழக்குகள் இருப்பது மருத்துவர்களுக்கு தெரிய வந்தது.

சோதனை

எனவே மருத்துவர்கள் இந்த நோயாளியின் உடலைப் பரிசோதித்து, அம்மாதிரியான ஒட்டுண்ணி உள்ளதா என்று சோதித்தனர். சில சோதனைகளின் முடிவில், இந்த நோயாளியின் உடலில் ஸ்பைரோமெட்ரா எரினாசியூரோபை என்னும் ஒட்டுண்ணி இருப்பது தெரிய வந்தது. உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் ஒட்டுண்ணியை வெளியேற்றி, அந்நோயாளியின் பிரச்சனையை சரிசெய்தனர்.

குறிப்பு

ஒருவரது உடலினுள் ஒட்டுண்ணி புழுக்களானது 2 வழிகளின் மூலம் நுழையும். அவையாவன:

* ஒன்று மனிதனின் மலத்தின் மூலம் பரவும்.

* மற்றொன்று பாதிக்கப்பட்ட பன்றி அல்லது மாட்டு இறைச்சியை நன்கு வேக வைக்காமல் சாப்பிடுவது.

எனவே மக்களே எப்போது இறைச்சிகளை சாப்பிடுவதாக இருந்தாலும், அவற்றை சுத்தமாக கழுவி, நன்கு வேக வைத்து பின் சாப்பிடுங்கள். முக்கியமாக இறைச்சியை அதிகம் சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள். இதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎலுமிச்சையை தோலுடன் எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Next articleசிறுநீரகத்தை பாதுகாக்க நன்னாரியை இப்படி கலந்து குடிங்க!