காதுவலி, காதுமந்தம், காது வீக்கம், காது குத்தல், காது இரைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வுகள்!

0
3400

காதுவலி குறைய

அறிகுறிகள்: காதுவலி.

தேவையான பொருட்கள்: கடுகு.

செய்முறை:
கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சினால் ஏற்படும் காதுவலி குறையும்.

அறிகுறிகள்: காது வலி.

தேவையான பொருட்கள்:
கரிசலாங்கண்ணி சாறு.
நெல்லிக்காய் சாறுசாறு.
பால்.
அதிமதுரம்.

செய்முறை:

கரிசலாங்கண்ணி சாறு நெல்லிக்காய் சாறு வகைக்கு 500 மில்லி எடுத்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதிமதுரப் பொடியையும் அதில் போட்டு தைலாமாக்கி தலைக்கு தேய்த்துக்கு குளித்து வந்தால் காது நோய் குறையும்.

அறிகுறிகள்:
காதுமந்தம்.

தேவையான பொருட்கள்:
வெட்டிவேர்த்தூள்.
நல்லெண்ணைய்.
அதிமதுரம்.
தேசாவரம்.
கடுக்காய்.
கஸ்தூரி மஞ்சள்.

செய்முறை:
வெட்டிவேர்த்தூள் 350 கிராம் எடுத்து 4 படி தண்ணீர் விட்டு அரைபடியாக் காய்ச்சி நல்லெண்ணைய் முக்கால் படி ,அதிமதுரம், தேசாவரம், கடுக்காய், கஸ்தூரி மஞ்சள் இவைகளை பொடித்து காய்ச்சி குளித்து வந்தால் காதுமந்தம் குறையும்.

அறிகுறிகள்:
காது வீக்கம்.

தேவையான பொருட்கள்:
வெற்றிலை சாறு.
கருஞ்சீரகம்.

செய்முறை:
வெற்றிலையை சாறு எடுத்து கருஞ்சீரகம் சிறிது சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட காது வீக்கம் குறையும்.

அறிகுறிகள் :
காது குத்தல்

தேவையானப் பொருட்கள்:
சுக்கு.
பால்.
சர்க்கரை.

செய்முறை :
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து இருவேளை சாப்பிட்டுவர காது குத்தல் குறையும்.

அறிகுறிகள்:
காதுவலி.
காதுஇரைச்சல்.

தேவையான பொருட்கள்:
பூண்டு.
செய்முறை:
பூண்டின் தோலை உரித்து தலைப்பக்கம் கிள்ளிவிட்டு காதில் வைக்க காதுவலி குறையும்.

Previous articleதலைவலி குறைய சிறந்த தீர்வுகள்!
Next articleமார்புவலி, படபடப்பு, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல்,மயக்கம், அதிகமான வியர்வை போன்ற பிரச்சனைகளுக்கு.