சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ள தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் பிரியங்காவுக்கு தனியிடம் உண்டு.
மக்களின் கவனம் சிதறாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து நீண்ட நாள் தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருக்கின்றார்.
குறிப்பாக இவர் நிறைய காமெடி செய்து தன்னை தானே கிண்டல் செய்து கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
இந்நிலையில் இன்று இரவு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரியோ உள்ளிட்ட சிலர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தனர். இதன்போது, மூக்குத்தி முருகனை வைத்து பிரியங்காவை எல்லோரும் கலாய்த்துள்ளனர்.
நிகழ்ச்சியை மேலும் சுவாரஷ்யமாக்க அங்கு “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியே அரங்கேறிவிட்டது. குறித்த காட்சியை நடுவர்கள் முதல் அனைவரும் பார்த்து ரசித்துள்ளனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: