காதலிக்கு திருமணம்! மண்டபத்திலேயே தீக்குளித்து உயிரை விட்ட காதலன்… பிறகு என்ன ஆனது தெரியுமா?

0
828

காதலி வேறொருவரை திருமணம் செய்து கொள்வதை தாங்கிக்கொள்ள முடியாத காதலன், கல்யாணம் நடக்கவிருந்த மண்டப வாசலில் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பீர்க்கன்கரணையை சேர்ந்த 28 வயதான சந்துரு, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் சந்துருவை அந்த பெண் காதலித்தாரா என்பது குறித்து தகவலில்லை

இந்நிலையில் சந்துரு காதலித்து வந்த பெண்ணின் பெற்றோர், அவருக்கு வந்தவாசியை சேர்ந்த வேறொரு ஆணுடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் அதிருப்தி அடைந்தார் சந்துரு.

கடந்த 2ம் தேதி அப்பெண்ணின் திருமணம் நடைபெறவிருந்த கல்யாண மண்டபத்திற்கு அதிகாலையில் வந்த சந்துரு, கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.

சந்துருவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு வந்தவாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து சந்துரு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக சந்துருவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்றிரவு உயிரிழந்தார். சந்துருவின் தற்கொலை சம்பவம் குறித்து விரைவில் வந்தவாசி காவல்துறை விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் சந்துரு காதலித்து வந்த பெண்ணுக்கு நிச்சயக்கப்பட்டே கடந்த 2ம் தேதி அன்றே திருமணம் நடந்து முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: