காதலனை அடைய தந்தையை கொலை செய்த மகள்: தந்தை தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பகீர்!

0
310

இந்தியாவில் தந்தை, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயுடன் சேர்ந்து அவரை கொலை செய்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குல்தீப் சிங் (44). இவரின் மகள் சுதிக்‌ஷா (18). இவர் தருண் (23) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் இதற்கு குல்தீப் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தந்தை மீது கோபமடைந்த சுதிக்‌ஷா அவரை கொலை செய்ய முடிவெடுத்தார்.

தனது தாயையும் இதில் கூட்டு சேர்த்து கொள்ள முடிவெடுத்த சுதிக்‌ஷா, குல்தீப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுதிக்‌ஷாவின் தாய் குல்தீப்பை கொல்ல ஒத்து கொண்டார்.

அதன்படி தருணிடம் இது குறித்து சுதிக்‌ஷா கூற, நான்கு பேர் கொண்ட கூலிப்படையை தருண் தயார் செய்துள்ளார்.

இதையடுத்து எல்லோரும் சேர்ந்து குல்தீப் வீட்டுக்கு வந்து அவர் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றுள்ளனர்.

பின்னர் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக குல்தீப் பைக்கை கூலிப்படையினர் திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்த சுதிக்‌ஷா திருடர்கள் தங்கள் வீட்டுக்கு வந்து பைக்கை திருடி சென்றதோடு குல்தீப்பை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசாருக்கு சுதிக்‌ஷா மற்றும் அவர் அம்மா மீது சந்தேகம் வந்த நிலையில் அவர்களிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில் அனைத்து உண்மைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் தருணையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: