கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை மறக்கமால் செய்திடுங்க!

0

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை மறக்கமால் செய்திடுங்க

கடன் பிரச்சனை

இன்றைய காலத்தில் நாம் ஒவ்வொருவருக்கும் கடன் பிரச்சனைதான் பெரிய பிரச்னையாக இருக்கும். இவ்வாறான கடன் பிரச்சனைகளில் இருந்து விரைவில் மீள ஆன்மீக ரீதியான பரிகாரங்கள் உள்ளன.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். காலை ஆறு மணிக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

27 சுத்தமான கிழியாத வெற்றிலையை வாங்கிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் வெண்ணெயையும் வாங்கி வெற்றிலைக்கு நடுவே இந்த எண்ணெயை தடவி வெற்றிலையை சுருட்டி, மஞ்சள் வெள்ளை நூலில் மாலையாக கட்ட வேண்டும்.

வெண்ணெயை வெற்றிலையில் தடவும் போது, இந்த வெண்ணை போல என்னுடைய கடன் என் கையை விட்டு நழுவி சென்று விட வேண்டும் என்று அனுமனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே, இந்த மாலையை கட்டுங்கள். 27 வாரம் சனிக்கிழமை விடாமல் தொடர்ந்து இந்த மாலையை அனுமனுக்கு கட்டி போட்டால், கடன் தொல்லை தீரும்.

குறிப்பு: உங்கள் குடும்பத்தில் கடன் இருக்கிறது. குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி, உங்கள் பிள்ளைகள், தாத்தா, பாட்டி என்று யார் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஏனென்றால் 27 வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

27 வாரம் சனிக்கிழமை, 27 வெற்றிலைகளை கொண்டு தொடுத்த மாலை, அனுமனை நினைத்து பரிகாரத்தை செய்து பாருங்கள். திருப்பிக் கொடுக்க முடியாத கடனை கூட திருப்பிக் கொடுக்க முடியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடுத்து 3 மாதங்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு பணம் தேடி வந்து வீட்டை தட்டப்போகிறது! 12 ராசிக்கும் தன லாபம் எப்படி!
Next articleசூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்!