கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்! தீர்வுகள்!

0
450

கர்ப்பகாலத்தில், மிக அதிக கர்ப்பப்பை திரவம் இருப்பது ஹைடிராம்னியோஸ் எனக் கூறப்படுகிறது. கர்ப்பப்பை திரவம் குறைபாடு அல்லது பாலி ஹைடிராம்னியோஸ் எனவும் இது கூறப்படுகிறது.

கர்ப்பப்பை நீரானது, கருவிலுள்ள குழந்தையை சுற்றி இருக்கும் கிருமிகளற்ற திரவமாகும். இத்திரவம், குழந்தையின் சிறூநீரகத்திலிருந்து வெளியாகிறது: பின்னர் குழந்தையால் விழுங்கப்படும் போது இது உறிஞ்சப்படுகிறது. கர்ப்பகாலத்தின் 36 வது வாரம் வரை அதிகரித்துக் கொண்டே வரும் இதன் அளவு, பின்னர் குறையத் துவங்குகிறது. குழந்தை அதிகப்படியான சிறுநீர் கழித்தால், அல்லது குறைவாக விழுங்கினால், அதிகப்படியான நீர் தேங்கி இச்சூழ்நிலை உருவாகிறது.

அதிக ஹைடிராம்னியோஸ் காரணத்தால், குழந்தையின் நரம்பு மண்டல பாதிப்பு, வயிற்றடைப்பு, மரபணு கோளாறுகள் ஆகியவை ஏற்படலாம். அரிதான நிகழ்வுகளில், நேரத்துக்கு முந்தைய பிரசவ வலி அல்லது சிசு மரணம் ஏற்படலாம். மிதமான ஹைடிராம்னியோஸ் வாடிக்கையானதுதான். மேலும் கர்ப்பகாலத்தின் இரண்டாவது காலாண்டில், அதிகமாகும் இதன் அளவு எந்த சிகிச்சையும் இன்றி தானாக குறைந்து விடும்.

ஹைடிராம்னியோஸ் பிரச்சினை இருப்பதை அறிவது எப்படி?
மிதமான ஹைடிராம்னியோஸ் இருப்பதற்கான அறிகுறிகள் பொதுவாக தெரிவதில்லை. உங்களுக்கு மூச்சுத்திணறல், வயிற்று வலி, வீக்கம் ஆகியவை இருந்தால், அதிகமான ஹைடிராம்னியோஸ் இருப்பதை அறியலாம்

வாடிக்கையான பரிசோதனைகளின் போது, உங்கள் வயிற்றின் அளவை (இனப்பெருக்க உறுப்பின் எலும்பு முதல் கர்ப்பப்பையின் உச்சம் வரை) நாடா மூலம் அளக்கப்படும். குழந்தையின் வளர்ச்சியும், கைகள் அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் மூலம் கணிக்கப்படும். ஹைடிராம்னியோஸ் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், கர்ப்பப்பை திரவ நிலையை அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் அறியலாம்.

ஹைடிராம்னியோஸ்-க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
ஹைடிராம்னியோஸ் ஏற்படுத்திய காரணங்களுக்கு சிகிச்சையளிக்க இயலாது: பாதிப்புகளுக்கு மட்டுமே மருத்துவர் சிகிச்சையளிக்க முடியும். மூச்சு விட அல்லது நடக்க சிரமம் இருந்தால் மருத்துவமனையில் தங்க நேரிடலாம். ஹைடிராம்னியோஸ் காரணத்தால், முன்னதான பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதால், இதை தடுக்கும் மருத்துவமும் தேவைப்படும். அம்னியோசெண்டசிஸ் என்ற அதிக திரவத்தை நீக்கும் சிகிச்சையும் அளிக்கப்படும்

ஹைடிராம்னியோஸ் ஏன் ஏற்படுகிறது என அறியும் பரிசோதனகள் மேற்கொள்ளப்படும். அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் குழந்தைக்கு பாதிப்புகள் உள்ளதா என அறியப்படும். ஹைடிராம்னியோஸ் ஏற்படக் காரணமான மரபணு பிரச்சினைகளும் பரிசோதிக்கப்படும். நீரிழிவு நோயை அல்லது நோய் தொற்றுக்களை அறிய இரத்தப்பரிசோதனையும் செய்யப்படும். பல நேரங்களில் ஹைடிராம்னியோஸ் ஏற்படும் காரணங்களை அறியவே இயலாது.

ஹைடிராம்னியோஸை எவ்வாறு தவிர்ப்பது?
தவிர்க்க இயலாது. இதன் காரணங்களை அறிய முடியாவிட்டாலும், குழ்ந்தையின் விழுங்கும் தன்மை மாறுவதால் இது ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது. காரணங்களை அறிய முடியாததால், இதைத் தவிர்க்க நாம் பெரிதாக ஒன்றூம் செய்ய இயலாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்கே: ஓலிகோ ஹைடிராம்னியோஸ் என்ற ஒன்றை பற்றி கேள்விப்படுகிறேன். இதுவும் ஹைடிராம்னியோஸும் ஓன்றா?
ப: இல்லை. ஓலிகோ ஹைடிராம்னியோஸ் என்பது ஹைடிராம்னியோஸ் நிலையின் நேரடி எதிர்ப்பதமாகும் – கர்ப்பப்பை திரவம் குறைவான நிலையைக் குறிக்கும். குழந்தை அல்லது தொப்புள் கொடியில் கோளாறு அல்லது தாய்க்கு அதிக இரத்த அழுத்தம்இருந்தால் இவ்வாறு ஏற்படும். மிதப்பதற்கு போதுமான நீர் இல்லாமல், குழந்தையின் உடல் தொப்புள் கொடியுடன் அழுந்தி, ஆக்சிஜன் மற்றும் சத்துகளின் சுழற்சி தடைபடலாம். இவை ஏற்படாமல் இருக்கும் வகையில் சிகிச்சையளிக்கப்படும்.

கே: ஹைடிராம்னியோஸால் குழந்தை பாதிக்கப்படுமா?
ப: முன்னதான பிரசவம் தவிர, வேறு பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அதிக ஹைடிராம்னியோஸ் இருப்பதை உங்கள் மருத்துவர் உறுதிபடுத்தினால், குழந்தையின் வயிறு, மத்திய நரம்பு மண்டலம், இருதயம், டவுன்ஸ் சிண்ட்ரோம் போன்ற மரபணு கோளாறுகள் ஆகியவை குழந்தைக்கு இருக்கிறதா என பரிசோதிப்பார்.

கே: எனக்கு ஹைடிராம்னியோஸ் இருந்தால், குழந்தைக்கு கண்டிப்பாக பிரச்சினை இருப்பதாக கொள்ளலாமா?
ப: இல்லவே இல்லை. கர்ப்பகாலத்தின் இரண்டாவது காலாண்டில் ஹைடிராம்னியோஸ் ஏற்பட்டால், அது தானாகவே சரியாகி குழந்தை நன்றாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பிரசவங்கள் நிகழும் போதும் இந்நிலை ஏற்படலாம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அல்ட்ராசவுண்ட் சோதனைகளின் போது குறைபாடுகளை பரிசோதித்து அறியலாம்.

கே: ஹைடிராம்னியோஸ் எனது பிரசவத்தை பாதிக்குமா?
ப: தன்னை சுற்றி அதிக திரவம் இருந்தால், குழந்தை நன்றாக மிதந்து, முதலில் கால்கள் வெளியாகும். இவ்வாறு அமைந்தால், மீண்டும் தலையை முதலில் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். அல்லாவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்படும்.

ஓலிகோ ஹைடிராம்னியோஸ் – மிகக் குறைவான கர்ப்பப்பை திரவம்
ஒரு பெண்ணுக்கு ஓலிகோ ஹைடிராம்னியோஸ் இருந்தால், கர்ப்பபையில் குழந்தையை சூழ்ந்திருக்கும் திரவம் மிகவும் குறைவாக இருக்கும். இது குழந்தையை எப்படி பாதிக்கும் என்பதை அறிய, முதலில் நல்ல பிரசவத்தில்அதன் பங்கு பற்றி அறிய வேண்டும்.

கர்ப்பப்பை திரவம் என்றால் என்ன?
குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கர்ப்பப்பை திரவம் முக்கிய பங்காற்றுகிறது. குழந்தை இத்திரவம் மூலம் சுவாசிக்கிறது மற்றும் விழுங்குகிறது. தூய்மையான இத்திரவம், குழந்தையை பாதுகாப்பது மட்டுமன்றி அதற்குத் தேவையான சத்துக்களையும் அளிக்கிறது. குழந்தையின் நுரையீரல் மற்றும் ஜீரண உறுப்புகள் வலுவடைய இது உதவுகிறது. குழந்தையின் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும் வகையில், குழந்தை அங்குமிங்கும் நகரவும் இது உதவுகிறது.

கரு உருவாகி சுமார் 12 நாட்கள் கழித்து, கர்ப்பப்பை தயாராகத் துவங்கும். கர்ப்பப்பை திரவமும் அப்போதே உருவாக துவங்குகிறது. கர்ப்பகாலத்தின் ஆரம்பகாலங்களில், தாயிடமிருந்து வரும் நீரே இதில் அதிகமாக இருக்கும். 12 வாரங்களுக்குப் பிறகு இதில் குழந்தையின் சிறுநீர் அதிகமாக இருக்கும்.

கர்ப்பபை திரவத்தின் அளவு 28-32 வாரங்களுக்கு அதிகரித்தபடி இருக்கும். அந்த சமயத்தில், கால்வாசி அளவு திரவமாக இருக்கும். குழந்தை முழு வளர்ச்சியடைந்ததாக கருதப்படும் 37-40 வாரங்கள் வரை இதே நிலை நீடிக்கும். இதன் பிறகு இதன் அளவு குறையத் துவங்கும்.

ஓலிகோ ஹைடிராம்னியோஸ் என்றால் என்ன?
சுமார் நூற்றில் 8 பிரசவங்கள் வரை ஓலிகோஹைடிராம்னியோஸ் நிலை ஏற்படுகிறது. கர்ப்பகாலத்தின் கடைசி காலாண்டில் இது சாதாரணமாக நிகழக்கூடியது என்றாலும், கர்ப்பகாலத்தின் எந்த கட்டத்திலும் இது நிகழலாம். காலம் கடந்த எட்டில் ஒரு பிரசவத்தில் இந்நிலை ஏற்படுகிறது. கர்ப்பப்பை திரவங்கள் இயற்கையாகவே குறையத் துவங்கும் நேரத்தில் ஓலிகோஹைடிராம்னியோஸ் ஏற்படுகிறது.

அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் இது கண்டறியப்படுகிறது. இதன் காரணங்களை முழுமையாக கண்டறிய முடியவில்லை. ஓலிகோஹைடிராம்னியோஸ் கொண்ட பெரும்பாலான பெண்களிடம் காரணங்களே காணப்படவில்லை.

முக்கிய காரணங்கள் என்ன?
கீழ்கண்ட காரணங்களால், கர்ப்பகாலத்தின் முற்பகுதியில் ஓலிகோஹைடிராம்னியோஸ் ஏற்படுகிறது

குழந்தையிடம் ஏற்படும் சில வகை பிறவிக்குறைபாடுகள்
கர்ப்பப்பை கிழிதல் (கர்ப்பப்பை திரவம் உள்ள பை கிழிதல்)
சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப் பாதையில் ஏற்படும் கோளாறுகளே பெரும்பாலும் இதற்கு காரணமாகின்றன. இக்குறைபாடுள்ள குழந்தைகள் குறைவான சிறுநீர் கழிப்பதால், இதை அதிகளவு தன்னுள் கொண்டுள்ள திரவத்தின் அளவு குறைகிறது. அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு, தானாகவே இயங்கும் நோய்தடுப்பு முறை (system lupus erythematosus – SLE), தொப்புள் கொடி சிக்கல் போன்ற சில வகை மகப்பேறு கோளாறூகளும் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.

இதன் பாதிப்புகள் யாவை?
ஓலிகோஹைடிராம்னியோஸ் குறைபாட்டால், பெண்கள், குழந்தை மற்றும் பிரசவம் ஆகிய அனைத்தும் பல வகைகளில் பாதிக்கப்படும். காரணங்கள், பாதிப்பு நிகழும் நேரம், திரவத்தின் அளவு ஆகியவை பொறுத்து பாதிப்புகள் இருக்கும்.

கர்ப்பகாலத்தின் முதல் பாதியில், குறைவான திரவம் இருந்தால், பிறப்பு நுரையீரல் மற்றும் கை கால்களில் குறைபாடுகள் ஏற்படும். இக்காலத்தில், கர்ப்பம் கலைதல், குறைப்பிரசவம், குழந்தை இறந்தே பிறத்தல் ஆகியவை ஏற்படலாம்.
கர்ப்பகாலத்தின் இரண்டாம் பாதியில், குழந்தையின் குறைவான வளர்ச்சிக்குகாரணமாகிவிடும்.
பிரசவம் நெருங்கும் போது, பிரசவ வலி மற்றும் பிரசவத்தில் சிக்கல் ஏற்படும்.
என்ன செய்ய வேண்டும்?
ஓலிகோஹைடிராம்னியோஸ் இருந்தும் பிரசவம் நார்மலாக நிகழும் பெண்களுக்கு சிகிச்சை ஏதும் தேவையில்லை என அண்மை ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களின் குழந்தையும் ஆரோக்கியமாகவே இருக்கும்.

சிகிச்சை தேவைப்படும் போது, செயற்கை திரவம் மூலம் நிரப்பப்படும்.
மருத்துவரிடம் சென்று, கர்ப்பப்பை மற்றும் திரவத்தின் அளவை கண்கணிப்பதே சிறந்தது. பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் அவற்றை தடுக்கும் சிகிச்சைகளை மேற்கொள்வார்
அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு, தொப்புள் கொடி பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு அபாய அளவு அதிகமாக உள்ளது. அதிக இரத்த அழுத்தம் இருந்தால் மருத்துவரிடம் பிரசவத்திற்கு முன்னதாக ஆலோசிக்கவும். பிரசவத்தின் போது எந்த மருந்தும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உட்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
ஓலிகோஹைடிராம்னியோஸ் இருப்பதாக் அறீயப்பட்டால், ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு, அதிகமான திரவங்கள் உட்கொள்ளவும், ஒய்வெடுக்கவும் வேண்டும். குறை பிரசவ வலியை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: