கருவை கலைத்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

0
619

சேலம் மாவட்டத்தில் கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி உயிரிழந்ததையடுத்து, போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரியில் பயின்று வந்த ஜீவா, திருமணம் ஆகாமல் கருவுற்ற காரணத்தால், தனது வீட்டுக்கு தெரியாமல் கிராமத்தில் உள்ள போலி மருத்துவரான சுல்தான என்பவரிட உதவியுடன் கருவை கலைத்துள்ளார்.

பின்னர் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட ஜீவா, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநர் வளர்மதி, சுல்தானா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரை தொடர்ந்து போலி பெண் மருத்தவரை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: