இவையெல்லாம் வீட்டிலேயே கருக்கலைப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை – எச்சரிக்கை!

0
7115

இவையெல்லாம் வீட்டிலேயே கருக்கலைப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை – எச்சரிக்கை!

திருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்தினாலும் கூட எதிர்பாராத விதமாக கருத்தரிப்பு ஏற்படுவது இயல்பு. இவ்வாறான சமயங்களில் சிலர் கருக்கலைப்பு செய்ய முயல்வதுண்டு.

பொதுவாகவே, கருத்தரித்து கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சில உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என நமது முன்னோர்கள் மருத்துவ முறைகளில் கூறி சென்றுள்ளனர். அவற்றில் பலவும் கருச்சிதைவு மற்றும் குழந்தை பிறக்கும் போது கடினமான வலிகள் ஏற்படும் என்பனவாகும்….

எனவே, எந்த உணவுகள், மருத்துவ தாவரங்கள் மற்றும் மருந்துகள்… நமக்கு தெரியாமலேயே கருச்சிதைவு ஏற்பட காரணமாக இருக்கிறது என இனிக் காணலாம்….

மலமிளக்கிகள்

கருத்தரித்த ஆரம்பக் கட்டத்தில் மலமிளக்கிகளை உட்கொண்டால் கருக்கலைப்பு ஆகிவிடும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சில சமயத்தில் நீங்க வேண்டிய கரு கூட, இது குறித்த தெளிவின்மை காரணமாக கருக்கலைப்பு ஏற்பட காரணமாகிவிடும். எனவே, ஆரம்ப காலக்கட்டத்தில் மலமிளக்கிகள் உட்கொண்டால் கருக்கலைந்துவிடும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் சி

நீங்கள் உட்கொள்ளும் உணவில் அதிகப்படியான வைட்டமின் சி சத்து இருந்தால் கருச்சிதைவு ஏற்படும். சிட்ரஸ் பழங்கள் மற்றும் உடல் சூட்டை அதிகரிக்கும் காய்கறிகள் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்படும்.

பப்பாளி

இது பலரும் அறிந்த ஒன்று தான். பப்பாளி பழம், கருச்சிதைவு ஏற்படுத்தும் தன்மை கூடாது. ஆதலால் தான் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் கூறுகிறார்கள்.

பார்ஸ்லே

இதை மூலிகை முறையிலான கருக்கலைப்பு என கூறலாம். நாம் சமையலில் சேர்க்கும் இந்த உணவுப் பொருளானது கருச்சிதைவு ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது.

அஸ்பிரின் ஹை-டோஸ்

ஹை-டோஸ் அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொண்டாலும் கருச்சிதைவு ஏற்படும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் ஏதும் இல்லை. ஆரம்பக் காலக்கட்டத்தில் இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இலவங்கப் பட்டை

சமையலில் உபயோகிக்கும் இலவங்கப் பட்டையானது ஓர் மசாலா வகை உணவுப் பொருளாகும். இது மாதவிடாய் ஹார்மோன்களை தூண்டிவிட்டு கருச்சிதைவை ஏற்படுத்துகிறது.

அன்னாசிப்பழம்

பழுக்காத அன்னாசிப்பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும். உடலில் இது ஏற்படுத்தும் மிகபெரிய சூட்டின் காரணமாக தான் கருச்சிதைவு ஏற்படுகிறது.

கோஹோஸ் (cohosh)

கோஹோஸ் என்பது வட அமெரிக்காவில் பரவலாக காணப்படும் ஒருவகை மருத்துவ தாவரம். கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்தி உடனே கருச்சிதைவு ஏற்பட செய்கிறது. இதனால் மிகுந்த வலி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாங் க்வை (Dong Quai)

சீனா மற்றும் ஜப்பான் பகுதிகளில் பரவலாக காணப்படும் இந்த டாங் க்வை, மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மூலிகை கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு ஏற்படவும் காரணியாக இருக்கிறது.

குறிப்பு

இவை அனைத்தும் கருச்சிதைவு ஏற்பட காரணமானவை. சிலருக்கு இதனால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு உடல்நலமும் பாதிக்கப்படலாம். எனவே, இவ்வாறு கருச்சிதைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: