கருகருவென மின்னும் கார்மேகக் கூந்தலுக்கு ஆவாரம் பூ! பரம்பரை வழுக்கைக்கு இயற்கை தரும் இளமை வரம்!

0

கருகருவென மின்னும் கார்மேகக் கூந்தலுக்கு!

கருகருவென மின்னும்

தினமும் ஆவாரம் பூக்களைச் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதனை உணர்த்தும் ‘ஆவாரை பூத்திருக்க… சாவாரைக் கண்டதுண்டோ’ – எனும் அழகான பழம் பாடலிற்கு ஏற்ப வறண்ட, வளமில்லாத நிலத்திலும் கூட கொத்துக் கொத்தாக வளர்ந்து நிற்கும் ஆவாரம் செடிகளில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் இந்த ஆவாரம் பூவுக்கு உயிரையே காக்கக் கூடிய அப்படியொரு சக்தி காணப்படுகின்றது என்றால் மேனி எழில் எம்மாத்திரம்? சொல்லவும் வேண்டுமோ? உடலுக்குப் பொன் நிறத்தையும் நல்ல மினுமினுப்பை ஏற்படுத்தும் ஆவாரம் பூ, வழுக்கைத் தலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு சொல்கிறது.

ஆவாரம் பூக்களின் பலன்களில்

100 கிராம் ஆவாரம் பூ, 100 கிராம் வெந்தயம் மற்றும் அரை கிலோ பயத்தம்பருப்பு ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்து பெறப்படும் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வரும் போது கூந்தல் கருகருவென வளரும். மேலும், ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கற்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வரும் போது உடம்பு வலுவடைவதுடன் சர்க்கரை நோயும் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

பரம்பரையாக வழுக்கை தலையடையவர்கள், தலையில் முடி கொட்ட ஆரம்பித்ததுமே.. 100 கிராம் ஃபிரெஷ் ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்கி, அடுப்பில் வைத்து நீர் பதம் போகும் வரை நன்கு காய்ச்சி அதனுடன் கால் கிலோ தேங்காய் எண்ணெய் கலந்து, முன் நெற்றியில் தினமும் நன்றாகத் தடவி வந்தால், முடி உதிர்வது ஒரே மாதத்தில் நிற்பதோடு மட்டுமல்லாது வழுக்கை ஏற்படாமலும் தடுக்கும்.

ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுக்கும் போது சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமடைவதுடன், ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்து வரும் போது வாய் துர்நாற்றமும் நீங்கும். மேலும், வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் வெயில் உஷ்ணம் தாக்காது.

நெற்றியில் வரி, சுருக்கங்கள், தலைக்கு டை அடிப்பதால் ஏற்படும் கருமை திட்டுக்கள் போன்ற அழகைக் கெடுக்கும் செயற்பாடுகளுக்கு 100 கிராம் ஃப்ரெஷ் ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்கி, ஓசை வரும் வரை நன்கு காய்ச்சி, அதனுடன் 100 கிராம் பாதாம் ஆயிலைக் கலந்து பெறப்படும் எண்ணெயை கருமை படர்ந்த இடங்களில் குளிப்பதற்கு முன்னர் தடவி வரும்போது, ஓரிரு வாரத்தில் கருமை காணாமல் போய் வரி, சுருக்கம் ஆகியவையும் மறைந்துவிடும்.

ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை… என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருககக் கூடியன என்ற வகையில் கண் நோயிலிருந்து விடுதலை கிடைப்பதுடன், ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் ஆகியனவற்றை சம அளவில் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்து பெறப்படும் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடரச்சியாக சாப்பிட்டு வரும் போது உள் மூலம் குணமாகும்.

மேலும், ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வரும் போது உடம்பு தேஜஸ் அதிகரஜப்பதுடன், தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்ததல் அதீத தாகம் நீங்குவதுடன், சிறுநீர் சுரப்பது பெருகி உடல் துர்நாற்றமும் நீங்கும்.

பனிக்காலத்தில் வறட்சியால் முகம், கைகளில் ஏற்படும் மங்கு, தேமல் போன்றவற்றை போக்கி அழகைக் கூட்டுகிறது ஆவாரம் பூ. இதற்கு 100 கிராம் ஃபிரெஷ் ஆவாரம் பூ, 50 கிராம் வெள்ளரி விதை மற்றும் 50 கிராம் கசகசா ஆகியனவற்றை நன்கு அரைத்து பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு பால் சேர்த்து, மங்கு மற்றும் தேமல் உள்ள இடத்தில் வாரம் இருமுறை பேக் போட்டு நன்கு காய்ந்ததும் கழுவினால் ஒரே மாதத்தில் அத்தனையும் மறைந்து, உடலின் ஒரிஜினல் நிறம் பளபளக்கும்.

முடி கொத்துக் கொத்தாக கொட்டும் போது ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ மற்றும் தேங்காய் பால் ஆகியனவற்றை தலா ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளித்து வரும் போது உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நிறுத்தப்பட்டு கூந்தல் நன்க கருமையாகவும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரத் தொடங்கும். மேலும், ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் விட்டால் உடம்பு பொன்நிறமாவதுடன், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

உடம்பில் தேவையில்லாத இடங்களில் முடி வளந்து உருவாகக் கூடிய கருப்பான தோற்றத்தினை நீக்குவதற்கு லேசர் ட்ரீட்மென்ட் செய்து கொள்ளும்போது தோல் தடித்து மேலும் கருப்பாகிவிடும் எனவே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 250 கிராம் கோரைக் கிழங்கு, 100 கிராம் உலர்ந்த ஆவாரம் பூ மற்றும் 100 கிராம் பூலான்கிழங்கு ஆகியனவற்றை மெஷினில் அரைத்து பெறப்படும் பவுடரை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது தேவையில்லாத முடி உதிர்ந்து சருமம் பளிச்சென மின்னும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபலம் தரும் பனங்கற்கண்டு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!
Next articleகொழுப்பு குறைவடைந்து உடல் பருமன் குறைவதற்கு உதவும் இயற்கை மருத்துவ வழிகள்!