கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

0

கன்னி: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு பலவகையிலும் உங்கள் முன்னேற்றங்களைத் தடை செய்த சனி பகவான் 27.12.2020 முதல் 5-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். உங்களுக்குள் அடங்கிக்கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும். மனோபலம் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவரின் குறைநிறைகளை சுட்டிக் காட்டி அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கில்விட்டுப் பிடிப்பது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாள்களாக ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் இருந்த இக்கட்டான நிலை மாறும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் கடின உழைப்பைக் கண்டு அதிசயிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி தவறாகப் பேசியவர்களெல்லாம் உங்களின் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இந்த சனி மாற்றம் மறைந்துகிடந்த திறமைகளை வெளிக்கொணர்வதுடன் கௌரவம், புகழையும் தரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !
Next articleதுலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !