கனடாவில் நூற்றுக்கணக்கான வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபட்ட கும்பல் அதிரடி கைது!

0
310

கனடாவின் ரொரன்டோவிலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தமிழ் குடும்பங்களின் பல வீடுகளிலும் இந்த கொள்ளைக் கும்பல் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளமை தெரியந்துள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிலி நாட்டைச் சேர்ந்த 14 இளைஞர்கள் கடந்த 5 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹல்டன் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பலினால் கிட்டத்தட்ட 2.7 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டொரன்டோ பொலிஸ் சேவை, யோர்க் பிராந்திய பொலிஸ் மற்றும் கனடா எல்லை சேவையினால் கடந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளுக்கமையவே இந்த கும்பல் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல தமிழ் குடும்பங்களின் வீடுகள் உடைக்கப்பட்டு பெருந்தொகை நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: