தற்போது நாடு முழுக்க பலரும் Me Too என்ற இயக்கத்தின் கீழ் பாலியல் குற்றச்சாட்டுக்களை எடுத்து வைத்து வருகிறார்கள். இதில் தற்போது திருட்டு பயலே படத்தின் இயக்குனர் சுசி கணேஷன் மீது பெண் கவிஞரும் இயக்குனருமான லீனா மணிமேகலை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
2005 ல் டிவி சானலில் வேலை முடித்து திரும்பிய போது இயக்குனர் சுசி என்னை காரில் கூட்டி சென்று இறக்கி விடுவதாக கூறி சிறிது நேரில் ஒரு மாதிரி பேசி என் போனை பிடுங்கி ஓரமாக எறிந்ததோடு காரையுல் லாக் போட்டு விட்டார். என்னை அவரின் அபார்ட்மெண்டுக்கு வரவேண்டும் என மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சியான நான் உடனே காரை விட்டு இறக்கி விடுமாறு கெஞ்கி கேட்டேன். பின் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டினேன். அலறினேன். நான் எப்போதும் வைத்திருக்கு சிறு கத்தி தான் எனக்கு துணையாக இருந்தது. கத்தியை காண்பித்து என் போனையும் பிடுங்கி கொண்டு நான் தப்பித்து விட்டேன்.
அப்போது இதை சொல்லக்கூட தைரியமில்லை. இப்போது பலரும் அதை பற்றி பேசுவதால் நான் வெளிப்படையாக பேசுகிறேன் என கூறியுள்ளார் லீனா. இந்நிலையில் சம்மந்தப்பட்ட இயக்குனர் லீனாவை மன்னிப்பு கோர வேண்டும் இல்லையேல் அவதூறு வழக்கு தொடர்வேன் என கூற லினா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி புரட்சி செய்து வருகிறார்.